ப்ரம்மா நடத்தவிருந்த யாகத்தை தடுத்த நிறுத்த சரஸ்வதி தேவி மேற்கொண்ட பல விதமான செய்கைகளில்
ஒன்றாக அசுரர;களை ஏவிவிட்டாள். எல்லா அசுரர;களையும் தனது சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்த
பெருமாளின் மீது அசுரர;களின் ரத்தம் பீய்ச்சி அடித்ததால் சிவந்த நிறத்தைக் கொண்டு பவளவண்ணராக
காட்சி தருகிறார; என ஸ்தல வரலாறு.
பாற்கடலில் பொங்கிய விஷத்தால் கருநிறமானது திருமால் மேனி. அதை போக்கி பொன்னிற மேனி பெற
நினைத்த திருமால் காஞ்சி வந்தடைந்து, வீரட்டகாசத்தின் முன்பு தீர;த்தம் உண்டாக்கி, தாமரை மலர;களால்
வீரட்டகாசரை அர;ச்சித்து வழிபட்டார;. இதனால் மகிழ்ந்த
வண்ணம் தந்தருளியதாக கூறப்படுகிறது.
வைகுண்டத்திற்கு சென்று ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்க முற்பட்டு அங்கு சென்ற ப்ருகு முனிவரை
கவனியாது விஷ்ணு பகவான் மஹாலக்ஷ்மியுடன் பேசிக் கொண்டிருந்தார;. தன்னை அலட்சியம் செய்கிறார;
எனக் கோபம் கொண்ட ப்ருகு முனிவர;,விஷ்ணுவை காலால் எட்டி உதைத்து விடுகிறார;. உதைத்த கால்
வலிக்குமே எனக் கூறி விஷ்ணு பகவான் முனிவரின் காலை பிடித்து இதமாக தடவலானார;. தனது தவறை
உணர;ந்த ப்ருகு முனிவர;,இத்தலத்திற்கு வந்து பவளவண்ணரை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று