முருகப் பெருமான் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள மலை பிரணவ மலை எனப்படும். பிரணவம் முருகரை பூஜித்து இம்மலை வடிவாய் நிற்கிறது என ஸ்தல புராணம் கூறுகின்றது.
திருமாலும் திருமகளும், கண்வ முனிவரால் பெற்ற சாபத்தை, கைலாஸநாதரையும் பாலாம்பிகையையும் பூஜித்து, சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. மலைச்சாரலில் திருமகள் வேப்ப மரமாக நிற்பதாக ஐதீகம்.
மரத்தடியில் வேம்படி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார்.
சூரபத்மனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க முருகன் இவ்விறைவனை பூஜித்ததால், இவருக்கே முதல் பூஜை நடக்கின்றது.