ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் (நென்மேலி)

Primary Deity
ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள், உற்சவர் - ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

நென்மேலி ஆற்காடு நவாப் ஆட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. இவ்வூரைச் சேர்ந்த யக்ஞ நாராயண சர்மாவும் அவரது மனைவி சரஸவாணியும், நாராயணனிடத்தில் மெய்யன்பு கொண்டு இறைப்பணிகளை செய்து வந்தனர். திவானாக பணி புரிந்து வந்த யக்ஞ நாராயண சர்மா, நவாப்புக்கு தர வேண்டிய பணங்களை, தெய்வ கைங்கர்யங்கள் செய்து செலவழித்து விட்டார். இருவரையும் சிறைப் பிடித்து வர உத்தரவிட்டிருந்தார் நவாப். சிறைபட விரும்பாமல், தண்டனையிலிருந்து தப்பிக்க, கணவன்-மனைவி இருவரும் திருவிடந்தை குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தங்களுக்கு என சஞ்சலப்பட்டுக் கொண்டே உயிரை விட்டனர். ஆழ்ந்த பக்தி கொண்ட அவர்களுக்காக, பெருமாளே அவர்களுக்காக வருஷா வருஷம், பிண்டம் வைத்து பித்ரு பூஜை செய்கின்றார் நாராயணர். இதனால் பெருமாளுக்கு ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர் எனும் திருநாமம் வந்தது. ஸ்ரார்த்தம் செய்யப்படாமல் விட்டுப் போனவர்களுக்கும், ஸ்ரார்த்தத்தை செய்ய முடியாமல் நிறுத்தியவர்களுக்கும் - அவரவரது பித்ருக்கள் திதியிலும் அல்லது அமாவாசை/ஏகாதசி நாட்களிலும், பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு, ஸ்வாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ரார்த்த ஸம்ரக்ஷணம் எனப்படும். (குதப காலமான பித்ரு வேளை மதியம் 12.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை.) ஸ்ரார்த்த தளிகையாக வெண் பொங்கல் அல்லது தயிர் சாதம் செய்து, அதனுடன் எள்ளும்-பிரண்டையும் கலந்து அரைத்த துவையலை வைத்து, ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்து தருகின்றனர்.

ஸ்ரார்த்த சம்ரட்சண ஸ்தலம். மூலவர்: ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள், உற்சவர்: ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர், தாயார்: மஹாலட்சுமி. மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவராக ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர் சேவை சாதிக்கின்றார். சாளக்ராமத்தால் உருவான மஹாலட்சுமி தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...