பக்தர் ஒருவர் தான் வசிக்கும் இடத்தருகே பூமியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தை கண்டெடுத்தார். காஞ்சிபுரம் சென்று மஹா பெரியவரை தரிசித்து தனக்கு சிவலிங்கம் கிடைத்த விபரத்தை கூறினார். அந்த லிங்கத்திற்கு சந்திரமௌலீஸ்வரர் எனப் பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்யுமாறு கூறி, அவரை ஆசிர்வதித்து அனுப்பினார் மஹா பெரியவர். பெரியவரின் அறிவுரைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே இங்கு மூலவராக அருள் புரிகின்றார் என குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
புரசைவாக்கம் சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
Primary Deity
சந்திரமௌலீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சந்திரமௌலீஸ்வரர். சதுர ஆவுடை பீடமும், பெரிய பாணமும் கொண்ட அழகிய திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள் அம்பாள் திரிபுரசுந்தரி. கோஷ்டத்து மூர்த்தங்களும், உற்சவ மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன. வரசித்தி விநாயகர், கல்யாண சுப்ரமண்யர், ஐயப்பன், ஹனுமன், பைரவர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். இக் கோவிலில், யமபயம் போக்க ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஜபிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.