அருள்மிகு மனத்துணை நாதர் திருக்கோயில் (திருவலிவலம்)
God Name : மனத்துணை நாதர் எனப்படும் ஹ்ருதயகமல நாதேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று. கிழக்கு பக்கம் தவிர மற்ற எல்லா பக்கங்களிலும், கோயிலைச் சுற்றி, மாலையிட்டது போல் ஓடையொன்று அகழி போலுள்ளது.
முன் ஜென்ம ஊழ்வினையால் கரிக்குருவியாகப் பிறந்து, எல்லா பறவைகளாலும் விரட்டப்பட்டு, மதுரை சென்று, சோமசுந்தரரை தரிசித்து, வலியன் உருவம் பெற்று, இத்தலம் வந்து இவ்விறைவனை பூஜித்து வழிபட்டது. இதனால் இவ்வூர் வலிவலம் எனப் பெயர் பெற்றது.
சூரியன் இவ்விறைவனை வழிபட்டு, கோயிலை வலம் வந்தபோது, அவனது தேர் சக்கரம் அழுந்தப் பெற்று, கோயிலைச் சுற்றி அகழி உருவானது. தேருக்கு ஒரே சக்கரம் என்பதால் ஏகச்சக்கரபுரம் என்ற பெயர் வந்தது.
"பிடியதன் உரு" என்ற பதிகம் பிள்ளையாரை முன் நிறுத்தி ஞானசம்பந்தரால் பாடப்பட்டது இத்தலத்தில்தான்.
தமிழ்த் தாத்தா தொகுத்து வழங்கிய வலிவல மும்மணிக்கோவை பிரசித்தி பெற்றது.
மூலவர்: மனத்துணை நாதர், அம்பாள்: வாளையங்கண்ணியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மனத்துணை நாதர். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். ஹ்ருதயகமல நாதேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. பதினாறு படிக்கட்டுக்களுடன் கூடிய கட்டு மலை மீது சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
ஹ்ருதய நோய் கொண்டவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு வழிபட்டால் குணமடைகின்றனர்.
அம்பாள் வாளையங்கண்ணியம்மை தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வாளையமர்க் கண்ணி என்ற திருநாமமும் உண்டு.
வலம்புரி விநாயகர், நடராஜர், அம்மையப்பர் ஆகிய உற்சவ மூர்த்திகளின் செப்புச் சிலைகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.