அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோவில் (திருத்தேவூர்)
God Name : தேவபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபட்ட ஸ்தலம் என்பதால் தேவனூர் என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி திருத்தேவூர் என்றழைக்கப்படுகிறது. தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீஸ்வரர் எனவும், வியாழன் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் எனவும் போற்றப்படுகிறார்.
குபேரனுடன் போரிட்ட ராவணன், குபேரனது சங்கநிதி-பதுமநிதி கலசங்களை எடுத்து சென்று விட்டான். வெள்ளிக்கிழமை தினத்தன்று சுக்கிர ஹோரையில், குபேரன் இவ்விறைவனை வழிபட்டு, இழந்த செல்வங்களை மீண்டும் பெறுகிறான்.
தொடர்ந்து மழை பெய்யாது பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றபோது, கௌதம ரிஷி லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு, பஞ்சத்தைப் போக்கியதாக ஸ்தல வரலாறு. இந்திரன் விருத்திரனைக் கொன்ற பாவத்தால் சாபம் கொண்டு, இந்திர பதவியிழந்து, இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்று மீண்டும் பதவி பெற்றான் என ஸ்தல வரலாறு.
ஸ்தல விருட்சமான கல்வாழை கட்டுமலை மீதுள்ள கருங்கல்லில் வளர்வது அதிசயமாக உள்ளது. இதற்கு தண்ணீர் ஊற்றுவதில்லை என்கின்றனர்.
மூலவர்: தேவபுரீஸ்வரர், அம்பாள்: தேன் மொழியாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் தேவபுரீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். சதுரமான பீடத்தில் எழுந்தருளியுள்ள தேஜோ மய லிங்கம். கிழக்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ள அம்பாள் தேன் மொழியம்மை சர்வாலங்கார பூஷிதை. மதுரபாஷணி என்றும் அழைப்பார்கள்.
அஷ்ட கணபதி க்ஷேத்ரங்களுள் ஒன்றாக, இங்கு எழுந்தருளியுள்ள பிரம்ம வரதர் எனப்படும் வலம்புரி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. கட்டுமலை மீது சோமஸ்கந்த மூர்த்தியை தரிசிக்கலாம். இவ்வாலயத்திலுள்ள சிவா-விஷ்ணு துர்க்கை ஒரு கரத்தில் சங்கும் மற்றொரு கரத்தில் மான்-மழுவும் கொண்டுள்ளார்.
மாணிக்கவாசகர் வழிபட்ட ஆத்மநாதரின் சந்நிதி இருக்கின்றது. கௌதம ரிஷி பூஜித்த லிங்கம் கட்டுமலையில் உள்ளது.
தேவகுரு என்ற திருநாமம் கொண்டு சிறப்பு மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. பாதங்களடியில் முயலகன் இல்லை. வியாழ பகவான் இவரை வழிபட்டுள்ளார். அஷ்டகுரு, விரையகுரு, குரு நீசம் உள்ளவர்கள் இவரை வழிபட்டு, கெடுபலன்கள் நீங்கப் பெறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.