அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்

God Name : கேடிலியப்பர் (அட்சயலிங்கேஸ்வரர்)

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. சந்நிதி கட்டுமலை மீது உள்ளது. காவிரியின் பிரிவுகளில் ஒன்றான அகத்தியன் காவிரி எனப்படும் வெட்டாற்றின் தென்கரையிலுள்ளது. இந்த ஆற்றைக் கடக்க சம்பந்தருக்காக ஓடம் விட்டார் சிவபெருமான். இதனால் இந்த ஆற்றிற்கு ஓடம்போக்கி என்ற பெயரும் உண்டு. வேள் என்ற முருகக் கடவுள் பூஜித்ததால் இவ்வூர் வேளூர் எனப்படுகிறது. தேவலோகத்திலுள்ள தேவகந்தபுரியை மேல் வேளூர் என்றும், பூலோகத்திலுள்ள இத்தலத்தைக் கீழ்வேளூர் என்றும் கூறுவர். சூரபத்மன் முதலான அசுரர்களை சம்ஹாரம் செய்த முருகப் பெருமானை வீரஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இத்தலம் வந்து, இளம் முருகனாக அமர்ந்து தவம் மேற்கொண்டார். பிராயச்சித்தம் வேண்டி தவம் மேற்கொண்ட முருகனுக்கு, இடைஞ்சல்கள் செய்ய வீரஹத்திகள் கோர உருவெடுத்தன. குமரனுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க, காவலாக நின்றாள் பத்ரகாளி. அஞ்சுவட்டத்தம்மன் என்பவள் இவளே. வீரஹத்திகளே நடுங்கும் கோர ரூபம் கொண்டாள் அன்னை பார்வதி. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் ஆகாயம் என ஐந்து திசைகளிலும் வட்டமாக பரவி நின்று காவல் காத்ததால் அஞ்சுவட்டத்தம்மன் எனப் பெயர் பெற்றாள். நவவீராதியர்கள், தேவேந்திரன், தேவதச்சர்கள் ஆகியோரின் உதவியுடன் இவ்வாலயத்தை நிர்மாணித்த முருகன், தமது வேலாயுதத்தால் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, இவ்விறைவனை வழிபட்டார். பிரத்யட்சமான சிவபெருமானின் அருளால், முருகனைத் தொடர்ந்த வீரஹத்திகள் எரிந்து சாம்பலாயின. அகஸ்தியருக்கு வாக்களித்தபடி மணக்கோலத்தை இங்கு காட்டியருளிய ஸ்வாமி, தனது நடனக் கோலத்தையும் காட்டியருளினார். இத்தலத்தில் இவ்விறைவனை பூஜித்து வந்த ஆதிசைவர், கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு இறந்து விட்டார். அவருக்கு பிறந்த குழந்தை வளர்ந்து தந்தையின் பூஜா உரிமையைக் கேட்டபோது, அவனது உறவினர்கள், வீண்பழி சுமத்தி அவனை ஏசினார்கள். இதை கண்டிக்கும் வகையில், இறைவன் பழி சுமத்தியவர்கள் மீது தனது மழு ஆயுதத்தை வீசினார். மழு ஆயுதத்திற்கு வழிவிட்டு நந்தி விலகி நின்றது. இன்றும் விலகியபடியே காட்சியளிக்கின்றது.
மூலவர்: கேடிலியப்பர் எனப்படும் அட்சயலிங்கேஸ்வரர். அம்பாள்: வனமுலை நாயகி எனப்படும் சுந்தர குஜாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கேடிலியப்பர். சுயம்புலிங்கம். அட்சயலிங்கேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. வடமொழியில் 'க்ஷயம்' என்றால் கேடு, 'அ-க்ஷயம்' என்றால் கேடில்லாத என்று பொருள். எனவே அட்சயலிங்கம் என்றும் கேடிலியப்பர் என்றும் அழைக்கின்றனர். சந்நிதி கட்டுமலை மீது உள்ளது. நந்தியம் பெருமான் சற்று விலகியபடி தரிசனம் தருகின்றார். அரிய சிற்ப வேலைப்பாடுகளையுடைய அணியொட்டிக்கால் மண்டபம் நந்தியை அடுத்துள்ளது. படிக்கட்டுக்கள் இங்கிருந்து கட்டுமலைக்கு செல்கின்றன. ஏறும் வழியில் தவக்கோலம் பூண்ட முருகனை தரிசிக்கலாம். கட்டுமலை மீது மஹாமண்டபம் இருக்கின்றது. மஹாமண்டபத்தில் அட்சய சபை எனப்படும் ஆனந்த தாண்டவ சபையை தரிசிக்கலாம். திருமால் மத்தளம் கொட்ட, கலைமகள் வீணை வாசிக்க, இந்திரன் புல்லாங்குழல் ஊத, திருமகள் கைத்தாளம் போட, நான்முகன் தாளம் போட, நடராஜரின் ஆனந்த நடனத்தை அகஸ்தியர் காண, சிவகாமசுந்தரி நடனத்தை ரசிக்கும் பாவனை செய்ய - இவ்வளவு அற்புதங்களையும் செப்புச் சிலைகளாக வடித்துள்ளனர். கண்கொள்ளாக் காட்சி. பார்த்துக் கொண்டே இருக்கலாம். அகஸ்தியரின் வேண்டுகோளுக்காக ஊன்றிய வலது பாதம் உயர்த்தியும், உயர்த்திய இடது பாதத்தை ஊன்றியும், கால் மாறி ஆடிய கோலத்தைக் காணலாம். நடராஜப் பெருமானின் வலது பாதத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்கின்றது. மஹாமண்டபத்தின் வடக்கே உற்சவர் கல்யாணசுந்தரரை தரிசனம் செய்யலாம். கட்டுமலையை விட்டு கீழிறங்கியதும், உட்பிரகாரத்தில் வதரி விநாயகர் அமர்ந்து ஆசி வழங்குகின்றார். பக்கத்தில் ஸ்தல விருட்சமாகிய இலந்தை மரம். மரத்தடியிலுள்ள தனிக் கோவிலில் அகஸ்தியர் கோவில் கொண்டுள்ளார். சிறப்பு மூர்த்தமாக குபேரனும், பாலசுப்ரமண்யரும் எழுந்தருளியுள்ளனர். வலச்சுற்றின் வடக்கில் தனிக்கோவில் கொண்டுள்ள அம்பாள் வனமுலைநாயகி மிகப் பெரிய வடிவினள். அழகே உருவானவள். வடமொழியில் சுந்தர குஜாம்பிகை என்பார்கள். அம்பாள் சந்நிதியின் வடகிழக்கில் அஞ்சுவட்டத்தம்மன் கோவில் கொண்டுள்ளார். மூலஸ்தானத்தில் அன்னை பராசக்தி பத்ரகாளி வடிவில் எழுந்தருளியுள்ளார். அஷ்டபுஜங்களுடன் வீராவேச கோலத்தில் தரிசனம் தருகின்றாள். மிகப் பெரிய சுதைச் சிற்பம். அபிஷேகம் செய்வதில்லை. புனுகு சட்டம் சாத்தப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.