அருள்மிகு கைலாஸநாதர் திருக்கோவில் (செம்பியன் மாதேவி)
God Name : ஸ்ரீ கைலாஸநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
முன்மண்டபத்து மூலிகை ஓவியங்கள் சிறந்த வேலைப்பாடுகளின் உதாரணம். செம்பியன் மா தேவி கட்டிய கோவில் இருக்கும் ஊர் என்பதால், இவ்வூர் செம்பியன் மா தேவி எனப் பெயர் கொண்டது.
சீனாவின் மண்பாண்டங்கள் மூன்று இங்கே கண்டெடுக்கப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. இதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வைத்திருப்பார்கள் என மேலும் தகவல் கூறுகிறது.
மூலவர்: ஸ்ரீ கைலாஸநாதர், அம்பாள்: ஸ்ரீ பிரஹந் நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாஸநாதர். மிகப் பெரிய ஆவுடையாரும் பாணமும் கொண்ட அழகிய திருமேனி. நாகாபரணம் தரித்து ஜோதி ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார்.
உட்பிரகாரத்துடன் கூடிய தனி சந்நிதியில் அம்பாள் பிரஹந் நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
தேவகோஷ்ட மூர்த்தங்களான அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர், ஸித்தி கணபதி, சக்தி கணபதி, ஜேஷ்டா தேவி, ஐயனார், அகஸ்தியர் ஆகிய மூர்த்தங்களையும், கண்டராதித்த சோழனின் திருவுருவமும் காணலாம்.
சோமாஸ்கந்த மண்டபம், விஸ்வநாதர் சந்நிதி, செம்பியன் மா தேவி சந்நிதி ஆகியன தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.