அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் (புலியூர்)

God Name : வியாக்ரபுரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

தனது சாபத்தைப் போக்கிக்கொள்ள காமதேனுப் பசு, இங்குள்ள பாதிரி மரமருகேயுள்ள திருக்குளத்தில் நீராடி, இவ்விறைவனை வழிபட்டு, விமோசனம் பெற்றதாக வரலாறு. இக்குளம் இன்று மலட்டுக்குளம் என்றழைக்கப்படுகின்றது. வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் வாழ்ந்த ஸ்தலம் இது. அவரது குழந்தை உபமன்யு காமதேனுவின் பாலைக் குடித்து வளர்ந்தவன். இவ்ஊருக்கு வந்ததும் இங்குள்ள பால் பிடிக்காது போனதால், குழந்தையின் பசியை ஆற்ற, பாற்கடலையே புலியூருக்கு இறைவன் வரவழைத்தார் எனக் கூறுவர்.
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், அம்பாள்: சிவகாமசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வியாக்ரபுரீஸ்வரர். வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் வழிபட்ட இறைவன் என்பதால் இவருக்கு வியாக்ரபுரீஸ்வரர் என்று பெயர். அம்பாள் சிவகாமசுந்தரி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சுவாமி மற்றும் அம்பாள் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. வலச்சுற்றில் சிங்காரப் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பஞ்சபூத லிங்கம், துர்க்கை, பைரவர், சூரியன், சனீஸ்வரர், நடராஜர், தியாகராஜர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.