அருள்மிகு கஸ்தூரி ரங்கன் திருக்கோவில் (பாப்பா கோவில்)
God Name : கஸ்தூரி ரங்கன்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சாப விமோசனம் பெற்ற தேவர்கள் இங்கு துவார பாலகர்களாக சுவாமியின் திருவடிகளருகே உள்ளனர். துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்ற பிரம்மன் இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாள் கஸ்தூரி ரங்கன் சேவை சாதிக்கிறார். வலது கரத்தை மடித்து சிரத்தின் கீழ் வைத்து சயனித்துள்ளார். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். மிகப் பெரிய திருவுருவம். அழகான திருமேனி. நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் பாதசேவை செய்கின்றனர். உள்ளே எட்டிப் பார்த்தால் துர்வாசரை தரிசிக்கலாம். தனது உடலை மூன்றாக மடித்து, கருவறை முழுவதுமாக வியாபித்துள்ள ஆதிசேஷன், தனது தலைகளால் குடை பிடிக்கிறான். பெருமாளின் வலப்புறத்தில் ரங்கநாயகி தாயார் தனிக் கோவில் கொண்டுள்ளார். கமலவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். சக்கரத்தாழ்வார்/யோக நரசிம்மர், பெரிய திருவடி, சிறிய திருவடி, விஷ்ணு கணபதி ஆகியோரை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.