அருள்மிகு அனந்த நாராயணர் திருக்கோவில் (ஆவராணி)
God Name : அனந்தநாராயணர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
திருமங்கை ஆழ்வார் இத்தலத்திற்கு வரும்போது, பெருமாளும் தாயாரும் ஆபரணங்கள் ஏதுமின்றி ஏழை போல் காட்சி தந்தனர். இதைக் காண சகிக்காத ஆழ்வார், துளசியைப் பறித்து மாலை செய்து பெருமாள் - தாயார் இருவருக்கும் அணிவிக்கின்றார். அணிவித்த துளசி மாலைகள் தங்க மாலைகளாக மாறின. இவ்வாறு ஆபரணதாரியாக காட்சி தந்ததால், இவ்வூருக்கு ஆபரணதாரி எனப் பெயர் வந்தது. நாளடைவில் மருவி ஆவராணி என்றாயிற்று.
மூலஸ்தானத்தில் ஏழுதலை அனந்தனை படுக்கையாகக் கொண்டு, தலைக்கு தலையணையாக மரக்கால் வைத்து, சயனக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அனந்தநாராயணர். 19 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட பெரிய திருமேனி. சுதை சிற்பமானாலும் சிலா வடிவம் போலவே அழகாக விளங்குகிறார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள், ப்ருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், நான்முகர் ஆகியோரை கருவறையில் தரிசிக்கலாம். முதல் வாசல் வழியே திருமுக மண்டலம், நடு வாசல் வழியே நாபிக் கமலம், மூன்றாம் வாசல் வழியே திருவடிகள் என மூன்று வாசல்கள் வழியாக தரிசிக்க வேண்டும் என்பது முறை. வனவாசமும், யுத்தமும் முடித்து ஸ்ரீ ராமனே இங்கு சயனத்திலிருப்பதாக எண்ணும் பத்ம ஆஞ்சநேயரின் மூர்த்தம் வெகு நேர்த்தி. ஏழு தலை ஆதிசேஷன் ஏழு நாகங்களாக மாறி, கருடாழ்வாருக்கு ஆபரணங்கள் போல் அணிவித்து இருப்பது விசேஷம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.