அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் (சேஷமூலை)

God Name : ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சிவபெருமானின் நடனத்தைக் காண ஆசைப்பட்ட ஆதிசேஷன், பூமியில் மானிடனாகப் பிறந்து நடனத்தைக் கண்டு ரசிக்க, சித்தம் கொண்டு இறைவனை வேண்டினார். அதே வேளையில், தமக்கு குழந்தை வேண்டுமென்று சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அத்ரி முனிவரின் பத்தினியான அநுசுயை கரத்தில் ஒரு குட்டிப் பாம்பாகப் பிறந்து விழுந்தது. பாம்பு என கையை உதறிய அநுசுயை தேவியின் பாதத்தில் பட்டு, அத்ரி முனிவரின் பாதத்தில் விழுந்து குழந்தையாக மாறியது அந்தக் குட்டிப் பாம்பு. இறைவனின் அருளால் கிடைத்த அக்குழந்தைக்கு பதஞ்சலி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். பதம் என்றால் பாதம், சலித்தல் என்றால் விழுதல் எனப் பொருள். சிறு வயதிலிருந்தே சிவநாமங்களைக் கூறிக் கொண்டு, சிவ பூஜைகளைச் செய்து வந்தார் பதஞ்சலி. சிவபெருமானின் தரிசனமும் கிடைத்து, நடனத்தைக் காணும் பாக்யமும் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று சேஷமூலை. சேஷனாகிய பதஞ்சலி வழிபட்டதால் இவ்வூர் சேஷமூலை எனவும், இறைவனுக்கு சேஷபுரீஸ்வரர் எனவும் பெயர் வந்தன. திருநள்ளாற்றில் தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசித்து பின்னர், இத்தலம் வந்து இவ்விறைவனுக்கு இலுப்பை எண்ணையால் தீபம் ஏற்றி வழிபடுவது சம்ப்ரதாயமாக உள்ளது. அம்பாள் இங்கு கல்யாணசுந்தரியாக காட்சி தருவதால், திருமணத்தடை விலக பிரார்த்திக்கின்றனர்.
மூலவர்: ஸ்ரீ சேஷபுரீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ திரிபுரசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர். அழகிய ஒளி வீசும் பாணத்துடன் கூடிய சதுர ஆவுடையார் கொண்ட திருமேனி. மேற்கு நோக்கிய சந்நிதி. மேற்கு பார்த்த திருமுகத்தை சத்யோஜாதம் எனக் கூறுவர். ஸ்வாமியின் வலப்பக்கமாக உள்ள சந்நிதியில், அம்பாள் திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மூக்குத்தி பளபளக்க, கால்களில் கொலுசு மின்ன காட்சி தருகின்றாள். சிவபெருமானின் தொப்புள்கொடி பந்தம் என நந்தியம் பெருமானை ஆகம நூல்கள் கூறுகின்றன. இங்குள்ள தர்மநந்தி ஆகம முறைப்படி நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நந்தியின் மூக்கை, மூலவரின் நாபிக்கமல உயரத்திற்கு அமைப்பார்கள். இதன் காரணமாகவே, சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே செல்லக் கூடாது என்பர். பதஞ்சலி முனிவரின் சிலை ஒன்று அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. சாந்நித்யம் நிறைந்த பல சந்நிதிகள் இங்கு உள்ளன. பல வருடங்களாக சீர் செய்யப்படாமல் சிதைந்துள்ள இவ்வாலயம் புதுப்பிக்கும் பணியில் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.