அருள்மிகு ஆறுமுகஸ்வாமி திருக்கோவில் (பொரவாச்சேரி)
God Name : ஆறுமுகஸ்வாமி எனப்படும் தண்டபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஆறுமுகனின் சிலையை இவ்வளவு அழகாக வடித்த சிறந்த கலைஞனான சிற்பியின் வலது கைப் பெருவிரலை அரசன் துண்டித்து விடுகிறான். வேறு எங்கும் இது போன்ற சிலையை செய்யக் கூடாது என்பதே காரணம். பெரும் பொருட்களுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்ட திருமங்கை ஆழ்வார், இவ்வழியே செல்லும்போது, இரவு நேரம் வந்தமையால், இங்கேயே தங்கி தூங்க உத்தேசித்து, தாம் கொண்டு வந்த பொருட்களை, இங்குள்ள செல்லியம்மனிடம் கொடுத்து பாதுகாக்க சொன்னார். செல்லியம்மன் ராமர் கோவிலை சுட்டிக் காட்டியதால், இவ்வாலயத்து ஹனுமன் அப்பொருட்களை பாதுகாத்து, திருப்பி தந்தார் என வரலாறு. பொருள் வைத்த சேரி என்பதே நாளடைவில் மருவி பொரவாச்சேரி என்றானதாக கூறுகின்றனர். இவ்வூரில் ராமபத்ர பெருமாள் திருக்கோவிலொன்றும் இருக்கின்றது. சீதா தேவி, லட்சுமணன் சகிதமாக ஸ்ரீ ராமபத்ரர் எழுந்தருளியுள்ளார். திருநள்ளாறு திசையை நோக்கி பாதம் எடுத்து வைத்து, கம்பீரமாக நின்ற கோலத்தில் வீர மங்கள ஹனுமன் தரிசனம் தருகின்றார். இவரை வழிபடுவோர்க்கு சனிதோஷம் விலகும்.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள ஆறுமுகஸ்வாமியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு காட்சி தருகின்றார். பத்துக் கரங்களில் ஆயுதங்களும், இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்களாகவும் கொண்டு தரிசனம் தருகின்றார். மயில், திருவாசி, முருகப் பெருமானின் திருவுருவம் ஆகிய அனைத்தும் ஒரே கல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பு கிரானைட் சிற்பம். சிற்பத்தின் முழு எடையையும் மயிலின் கால்கள் தாங்குகிறது. மயில் தனது வாயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டுள்ளது. மயிலும் முருகப் பெருமானும் பறக்க தயாராகும் நிலையில் காணப்படுகின்றனர். முருகப்பெருமானின் திருமேனியின் அழகும், நகம், நரம்புகள் போன்றவற்றை துல்லியமாக காண்பித்துள்ள நேர்த்தியும் வியக்க வைக்கிறது. வலச்சுற்றில் அன்னதான பிள்ளையார், ஸ்வர்ண காளிகா தேவி மற்றும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரரை தரிசிக்கலாம். இவ்வூரில் செல்லியம்மன் கோவிலொன்றும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.