அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில் (சிக்கல்)

God Name : மூலவர்: நவநீதேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: சிங்கார வேலர்.

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. முசுகுந்த சக்ரவர்த்தியின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஸ்தலம். இத்தலத்தில் வசிஷ்டர் சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு பூஜித்து வந்தார். தமக்கு பரிசாக கிடைத்த காமதேனுப் பசுவின் பாலிலிருந்து வெண்ணெய் எடுத்து, அதை லிங்கமாகப் பிடித்து வழிபட்டு வந்தார். பூஜை முடிந்ததும், லிங்கத் திருமேனியை எடுக்க முற்பட்டார். அது கையில் எடுக்க முடியாதபடி சிக்கிக்கொண்டது. இதனால் இத்தலத்திற்கு சிக்கல் எனப் பெயர் உண்டாயிற்று. லிங்கத் திருமேனி வெண்ணெய் கொண்டு செய்யப்பட்டதால் இறைவனுக்கு வெண்ணைபிரான் என்றும் நவநீதேஸ்வரர் என்றும் பெயர் பெற்றது. வேல் நெடுங்கண்ணி அம்மன் தமது சக்தியை வேலாக சிங்காரவேலருக்கு வழங்கியதால் இத்தலத்தில் சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை செய்தால் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடுவார்கள். சூர சம்ஹாரம் செய்ய புறப்படும் புதல்வனை அம்பிகை ஆசிர்வதித்து வேல் கொடுத்து அனுப்பிய நிகழ்வை வேல் வாங்கும் விழா என கந்த சஷ்டியின் முதல் நாளில் கொண்டாடுகின்றனர். வேகமாக சென்று வேல் வாங்குவதால் முருகப்பெருமானின் திருமுகத்தில் வியர்வை அரும்பும் காட்சி காணக் கண் கோடி வேண்டும். தேவாரத்திருத்தலம் - மாடக்கோவில்
மூலவர்: நவநீதேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: சிங்கார வேலர், அம்பாள்: வேல் நெடுங்கண்ணி. மூலஸ்தானம் கட்டுமலை மீது அமைந்துள்ளது. பன்னிரண்டு படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும். இந்த அமைப்பை தேவகோட்டம் என அழைப்பார்கள். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ நவநீதேஸ்வரர் எனும் வெண்ணைபிரான், சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். குட்டையான பாணமும் சதுர ஆவுடையாரும் கொண்ட அழகிய திருமேனி. இவருக்கு வெண்ணைலிங்கேஸ்வரர், பால்வெண்ணைநாயனார் ஆகிய திருநாமங்களும் உண்டு. கோஷ்ட மூர்த்தங்களுள் நடராஜரும் சோமாஸ்கந்தரும் அழகாக இருக்கின்றனர். இங்குள்ள சோமாஸ்கந்தர் சந்நிதியில் மரகத விடங்கர் எனப்படும் மரகத லிங்கத்தை தரிசிக்கலாம். கீழ்ப்படி அருகாமையில் சுந்தர கணபதி அமர்ந்து ஆசி வழங்குகின்றார். மூலவர் சந்நிதிக்கு வலப்புறத்திலுள்ள மண்டபத்தில் சிங்காரவேலர் செப்புச் சிலை வடிவில் வெள்ளி மஞ்சத்தில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். அழகிய மூர்த்தி. இருபுறமும் வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். மயில், ஆட்டுக்கடா, குதிரை வாகனங்கள் தங்கத்தினால் செய்யப்பட்டவை. கட்டுமலையை விட்டு கீழிறங்கி வந்து அம்பிகை வேல் நெடுங்கண்ணியை தரிசிக்கலாம். வடமொழியில் சத்தியதாட்சி என்று அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய சந்நிதி. முருகனுக்கு வேல் கொடுத்ததாக ஐதீகம். ஸ்ரீ விசாலாட்சி உடனாய ஸ்ரீ விஸ்வநாதர், கார்த்திகை விநாயகர், அறுபத்திமூவர், பைரவர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். காமதேனுவின் பால் நிறைந்த குளம் க்ஷீர தீர்த்தம் (பாற்குளம்) எனப் பெயர் பெற்றது. இது கோவிலுக்கு மேல்புறத்தில் உள்ளது. ராஜகோபுர வாசல் தாண்டியதும் காணப்படும் கிருத்திகை மண்டபத்தில் ஒவ்வொரு மாதமும் சிங்காரவேலர் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வார். வடமேற்கில் ஆஞ்சநேயர் சந்நிதி கொண்டுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.