அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி திருக்கோவில் (நாகப்பட்டினம்)

God Name : மெய்கண்ட வேலவர் (முருகப் பெருமான்)

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

அழகு முத்து என்பவன் பிறவி ஊமை. இவ்வாலயத்தின் பணிகளை செய்து விட்டு, இங்கே தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, இங்கேயே உறங்குவது வழக்கம். கோவில் அர்ச்சகர், ஒரு பட்டை சாதப் பொட்டலத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு செல்வது வழக்கம். பணிகளை முடித்த பின்னர் அதை எடுத்து உண்பது அழகு முத்துவின் வழக்கம். எல்லாம் முருகன் செயல் என்றிருக்கும் அப்பாவியான அழகு முத்துவிற்கு ஒரு நாள் சோதனை ஏற்பட்டது. சாப்பாடு பொட்டலத்தை துணி மூட்டை இடையில் வைத்து விட்டார் அர்ச்சகர். சூரிய அஸ்தமனம் வரை வேலைகளை செய்து விட்டு அயர்ந்து தூங்கிய அழகு முத்து, நள்ளிரவில் விழித்துக் கொண்டு, சாப்பாடு பொட்டலத்தை தேடிக் கிடைக்காது போகவே, பசி தாங்காது அழுதான். கையில் பஞ்சாமிர்த கிண்ணத்துடன் வந்த சிறுவன் ஒருவன், இதை சாப்பிடு என பஞ்சாமிர்தத்தை ஊட்டி விட்டான். அதை சாப்பிட்ட அழகு முத்துவுக்கு, பசி தீர்ந்ததோடு இல்லாது, பேச்சும் வந்து விட்டது. முருகன் அருளால் பேசத் தொடங்கிய அழகு முத்துவிற்கு, வள்ளி-தெய்வயானையுடன் காட்சி தந்தார் மெய்கண்ட வேலவர் என ஸ்தல வரலாறு. பிரெஞ்ச் கவர்னர் டூப்ளேயின் செயலாளரான ஆனந்தரங்கம் இக்கோவிலை கட்டியதாக கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் கம்பீரமான தோற்றத்துடன் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். மெய்கண்ட வேலவர் எனும் திருநாமம். திருமுடியில் கரண்ட மகுடம் கொண்டும், வச்சிரம்-சக்தி ஏந்திய மேற்கரங்கள், ஒன்று சடை மீதும் மற்றொன்று அபய முத்திரை கொண்டும் காணப்படும் கீழ்க்கரங்கள் என ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு, கிழக்கு பார்த்து தரிசனம் தருகின்றார். இருபுறமும் வள்ளி-தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். பின்புறம் தோகை மயில். கொடி மரத்தருகே இடும்பன் சந்நிதி கொண்டுள்ளார். பெரிய மீசையுடனும், ஒரு கையை கதை மீது வைத்தும் காட்சி தருகின்றார். உள் மண்டபத்தில் கன்னி கணபதி, ராஜதுர்க்கை, பைரவர், சிவசூரியன், சனீஸ்வரர், நவகிரகங்கள், உற்சவ மூர்த்திகள் ஆகியோரை தரிசிக்கலாம். குபேர பெருமானின் சந்நிதியும் உள்ளது. மெய்கண்ட வேலவரை தரிசிக்க இந்திரன் தனது ஐராவதத்துடன் வந்திருந்தான். அவரது அழகில் மயங்கிய இந்திரன் தனது ஐராவதத்தை இங்கேயே விட்டு விட்டுச் சென்றானாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.