அருள்மிகு நெல்லுக்கடை மாரியம்மன் திருக்கோவில், நாகப்பட்டினம்
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
அம்மனின் தீவிர பக்தை ஒருவர், நெல் வியாபாரம் செய்து வருபவர். இவரது கடை வாசலில் நின்று கொண்டு, ஒரு பெண்மணி நெல் வேண்டுமெனக் கேட்டாள். நெல்லை அளந்து அவளது கூடையில் போட்டு விட்டு, காசு வாங்க நிமிர்ந்து பார்த்தால், அந்த பெண்மணியைக் காணவில்லை. அன்றிரவு கடைக்காரியின் கனவில் தோன்றிய அதே பெண்மணி, தான் வேப்ப மரத்தடியில் புற்று உருவமாக இருப்பதாகத் தெரிவித்தாள். உடனே அந்த புற்றைக் கண்டுபிடித்து, அதற்கு மஞ்சள் பூசி பூஜித்து வந்தனர். பின்னர் செப்பு படிமம் செய்து பூஜிக்கலாயினர். நெல்லுக்கடை வியாபாரியால் பூஜிக்கப்பட்டு வருவதால் நெல்லுக்கடை மாரியம்மன் என்று அழைக்கப்படுகின்றாள்.
ஆண்டுதோறும் நடைபெறும் செடில் உற்சவம் பிரசித்தி பெற்றது. உயரமான கம்பம் ஒன்று நடப்பட்டு, அதன் குறுக்கு வாக்கில் ஒரு கம்பம் பொருத்தப்பட்டு, அதன் முனையில் ஒரு ராட்டின அமைப்பு போன்ற தொட்டில் வைக்கப்பட்டு இருக்கும். ராட்டின அமைப்பு தொட்டிலில், காத்தவராயன் வேஷத்தில் கோவில் பூசாரி நின்று கொண்டு இருப்பார்.
உடுக்கை, பம்பை மற்றும் பல வாத்தியங்கள் முழங்க, ராட்டினம் சுற்றி வரும். ராட்டினம் தாழ வரும்போது, ஒவ்வொரு குழந்தையாக பூசாரியிடம் தருவார்கள். பூசாரி அக்குழந்தையுடன் மேலெழும்பி ஒரு சுற்று சுற்றிவிட்டு, கீழிறங்கியதும் குழந்தையைத் தருவார். பின் இதே முறையில் அடுத்தடுத்து குழந்தைகள். இதற்கு செடில் சுற்றுதல் எனப் பெயர். இம்முறையைப் பின்பற்றுவதால், குழந்தைகளுக்கு, நோய்கள் ஏதும் வராமல் மாரியம்மன் பார்த்துக் கொள்வார் என ஐதீகம்.
மர ராட்டினத்தின் உச்சியில், உடல் நலமில்லாத குழந்தைகளை வைத்து மூன்று முறை சுற்றுவார்கள். இந்த செடில் சுற்றுதலுக்கு பணம் கட்டிவிட்டு, சீட்டு வாங்கிக் கொண்டு 2-3 நாட்கள் காத்திருக்க நேரிடும். வைகாசி மாத கடைசி ஞாயிறன்று விடிய விடிய செடில் சுற்றுவார்களாம்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படும் இவள் புகழும் கீர்த்தியும் கொண்டவள். எட்டடி உயரம் கொண்டுள்ள அழகிய திருமேனியை உடையவள். கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஆவணி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மனின் திருவடிகளில் விழுந்து நமஸ்கரிப்பதைக் காணலாம். பின்புறம் நாகர்களும், வேம்பு விருட்சமும் காணலாம்.
மூலஸ்தானத்தருகே கார்முகேசுர ஈஸ்வரரை தரிசிக்கலாம்.
வலச்சுற்றில் எல்லை அம்மன் மற்றும் அய்யனார் ஆகியோரின் சுதை வடிவங்களை தரிசிக்கலாம். இரண்டாம் வாசலில் செல்லப் பிள்ளையார், முருகன், ஆர்யமாலா - பொம்மியோடு காத்தவராயஸ்வாமி, கார்முகேச ஈஸ்வரன் ஆகியோரின் உற்சவத்திருமேனிகளைக் காணலாம்.
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ துர்க்கை, காத்தவராயன், பிடாரி மற்றும் பெரியாச்சி ஆகியோரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.