அருள்மிகு சௌந்தர்யராஜப் பெருமாள் திருக்கோவில் (நாகப்பட்டினம்)

God Name : மூலவர்: நீலமேகப் பெருமாள்் உற்சவர்: சௌந்தர்யராஜப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

அர்ச்சாவதார மூர்த்திகளுள் மிகவும் அழகு வாய்ந்தவர் திருநாகை எம்பெருமான். இவரது பேரழகில் மயங்கிப் போன ஆழ்வார், "அச்சோ வொருவ ரழகியவா" என முடியும் பாசுரத்தைப் பாடியுள்ளார். பாற்கடலைக் கடையும்போது அமிர்த மதன காலத்தில் தோன்றிய ஆலகால விஷம், திருமாலின் அழகிய மேனியை நீலநிறமாக ஆக்கிவிட்டது எனப் புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுத் தம் மேனி திரும்பப் பெற்றார் என்று கூறப்படுகின்றது. கிருத யுகத்தில் நாகர்களின் தலைவன் இங்கு தவமிருந்தான். அவனது தவத்தினால் மகிழ்ந்து பிரத்யட்சமான பெருமாள், அவனைத் தனது படுக்கையாக ஏற்றுக்கொண்டார் எனக் கூறுவர். (ஆதிசேஷன்) நாகர் தலைவன் வரம் பெற்றதினால், நாகர் பட்டினம் எனப் பெயர் பெற்ற இவ்வூர் காலப்போக்கில் மருவி நாகப்பட்டினம் என்றானதாகக் கூறப்படுகின்றது. துருவன் எனும் அரசகுமாரன் மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சி, சௌந்தர்யமான கோலத்துடன் பிரத்யட்சமானார் எம்பெருமான். அவருடைய அழகில் மயங்கிய துருவன், வரம் கேட்க இருந்ததை விடுத்து, இந்த சௌந்தர்ய ரூபத்தை எப்போதும் காணும் பாக்கியம் ஒன்றே போதும் என வேண்டினான். துருவனுக்கு சேவை சாதித்த கோலத்திலேயே இங்கு எழுந்தருளியுள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆதிசேஷன் உண்டாக்கிய தீர்த்தம் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: நீலமேகப் பெருமாள்் உற்சவர்: சௌந்தர்யராஜப் பெருமாள். தாயார்: சௌந்தரவல்லி் உற்சவத் தாயார்: கஜலட்சுமி. மூலஸ்தானத்தில் நீலமேகப் பெருமாள் மூலவராக சேவை சாதிக்கின்றார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, கையில் கதாயுதம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். நாகராஜன், திருமங்கை ஆழ்வார், கலியன், பிரம்மாதி தேவர்கள் ஆகியோர்க்காகப் பிரத்யட்சமானதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சௌந்தர்யராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். பெயருக்கேற்றபடி பேரெழிலுடன் விளங்கும் விக்ரகம். தாயார் சௌந்தரவல்லியும் உற்சவத் தாயார் கஜலட்சுமியும் பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்கலாம். ஸ்ரீ ரங்கநாதர் அழகான திருமேனியுடன் சயனக் கோலத்தில் தரிசனம் தருகின்றார். இவரது சந்நிதியில் அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச் சிலை ஒன்றும் உள்ளது. இவரது ஒரு கரம் பிரகலாதனின் சிரசை தொட்டுக்கொண்டும், மற்றொரு கரம் அபய ஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்றக் கரங்கள் ஹிரண்யவதம் செய்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.