அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் (நாகப்பட்டினம்)
God Name : மூலவர்: காயாரோகணேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: சுந்தர விடங்கர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
கச்சிக் காரோணம், குடந்தைக் காரோணம், நாகைக் காரோணம் என சிவஸ்தலங்களில் மூன்று காரோணங்கள் உண்டு. இந்த மூன்று ஸ்தலங்களிலும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர் புண்டரீக முனிவர். இவர் யமுனைக்கரை வாழ் முனிவரான கருத்தமர் என்பவரின் புத்திரர். குடந்தையிலே, ராமர் ருத்ர அம்சம் பெற விரும்பியபோது இறைவன் அவரது உடலிலே ஆரோகணித்துக் கொண்டார் என்பதை அறிந்து கொண்ட முனிவர், நாகப்பட்டினம் வந்து இவ்விறைவனை தரிசித்து, பின் தம்மை இறைவனது உருவில் ஆரோகணித்துக் கொள்ள வேண்டி தவமிருந்தார். இவரது தவத்தினால் மகிழ்ந்த இறைவன், அவரது காயத்தை - அதாவது உடலை - தம் மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார். இதனால், இத்தலம் காயாரோகணம் எனப்படுகின்றது. காயா என்றால் உடல், ரோகணம் என்றால் ஏற்றுக் கொள்ளுதல். புண்டரீக முனிவரின் காயத்தை அதாவது உடலை தமது மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார் சிவபெருமான். இதனால் ஸ்வாமிக்கு காயாரோகணர் என்றும், இவ்வூருக்கு காரோணம் என்றும் பெயர்கள் வந்தன. இவ்வாலயத்திலுள்ள ராஜதானி மண்டபத்தில் எல்லா மூர்த்திகளும் ஒருசேர காட்சி தருவதால் இவ்வூருக்கு சிவராஜதானி எனப் பெயர் வந்ததாக கூறுவர். தியாகராஜரின் ஆட்சி பீடம் என்பதால் சிவராஜதானி என்பதாக கூறப்படுவதுண்டு. முசுகுந்த சக்ரவர்த்தி இவ்வாலயத்து சுந்தர விடங்கரை வழிபட்டு தனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டதாக வரலாறு. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார் வாழ்ந்த ஸ்தலம். அருகாமையிலுள்ள நம்பியாங்குப்பம் எனும் ஊரைச் சேர்ந்தவர். மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்த இவர், வலையில் பிடிபடும் முதல் மீனை சிவபெருமானுக்கு என்று விட்டு விடுவார். ஒரு நாள் முதலில் கிடைத்த மீனே பொன் மீனாக இருந்தது. இருப்பினும் அதை சிவபெருமானுக்காக விட்டு விட்டார். இவரது நேர்மையையும், இறைபக்தியையும் மெச்சிய இறைவன் நேரில் பிரத்யட்சமாகி, அருளாசியை வழங்கி, ஆட்கொண்டதாக வரலாறு. ஆதிபுரம், பார்ப்பதீச்வரம், அகத்தீச்வரம், அரவநகரம் என்றெல்லாம் பெயர்களைக் கொண்ட ஸ்தலம். சப்த விடங்க ஸ்தலங்களுள் ஒன்று - சக்தி பீடங்களுள் ஒன்று - தேவாரத்திருத்தலம்.
மூலவர்: காயாரோகணேச்வரர், விடங்கர்: சுந்தர விடங்கர், அம்பாள்: நீலாயதாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காயாரோகணேச்வரர். பெரிய பாணத்துடன் கூடிய தேஜோமயமான அழகிய திருமேனி. கருவறை சுவரில் காயாரோகணருக்கு பின்னால் இருப்பவர் ஆதிபுராணர் எனப்படும் சோமாஸ்கந்தர். அகஸ்தியர் முதலான ஏழு முனிவர்களுக்கு திருமணக் கோலத்தை காட்டி அருளியவர். இங்கு அருள் பாலிக்கும் அம்பாளின் திருநாமம் நீலாயதாட்சி. அழகே உருவாக எழுந்தருளியுள்ளார். நீல நிறக் கண்களையுடையவள். இவள் அழகை முழுவதுமாக தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் என்பர். கருந்தடங்கண்ணி என்றும் அழைப்பார்கள். காயாரோகணரை விட பிரபலமானவள். அறுபத்தி நான்கு சக்தி பீடங்களுள் ஒன்று. வலம் வருகையில் அழுகணி சித்தர் சந்நிதி உள்ளது. சங்கீத மும்மூர்த்திகளான - தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் மூவரும் இந்த அம்பிகையின் அருள் பிரபாவத்தை கீர்த்தனைகளாக பாடியுள்ளனர். 'அம்ப நீலாயதாட்சி' எனும் கீர்த்தனையை நீலாம்பரி ராகத்தில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியுள்ளார். இது மிகவும் பிரசித்தம். ஸ்தல விநாயகரான நாகபரணப் பிள்ளையார் ஐந்து தலைப் பாம்பு குடைப் பிடிக்க அமர்ந்துள்ளார். பின்புறமாக சுதை உருவில் நந்தியம் பெருமான். வடபுறமாக பந்தல் காட்சி மண்டபமும், தென் புறமாக முக்தி மண்டபமும் காணலாம். உள்ளே மாவடிப் பிள்ளையார், பஞ்சமுகப் பிள்ளையார் மற்றும் விஸ்வரூப விநாயகரை தரிசிக்கலாம். தசரத சக்ரவர்த்தி பிரதிஷ்டை செய்த சனீஸ்வரர் இங்கு விசேஷ மூர்த்தியாக இருக்கின்றார். தியாகராஜரின் சந்நிதியில் பெரிய மேடை மீது, முத்து விதானத்தின் கீழ், அழகிய சிம்மாசனத்தில் எழுந்தருளியிருப்பவர் சுந்தர விடங்கர். இவர் ஆடும் நடனம் பாராவார தரங்க நடனம் என்றழைக்கப்படுகிறது. இவருக்கு முன்புறமாக இரண்டு வீரகட்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. அபிஷேக ஆராதனைகள் செய்ய ஸ்படிக லிங்கம் உள்ளது. பாராவாரம் என்றால் கடல், தரங்கம் என்றால் அலைகள் என்று பொருள். அதாவது கடலின் மீது தோன்றும் அலைகள் கரையை நோக்கி மேலோங்கி வருவதும் பின்னர் வீழ்ந்து தணிந்து திரும்புவதுமான நிகழ்வைப் போன்று, உயர்ந்தும் - தாழ்ந்தும் சுழன்றாடும் நடனத்தை சுந்தர விடங்கர் ஆடுகின்றார். சுந்தரவிடங்கரை காரோணச சிந்தாமணி என்று புராணத்தில் குறிப்பிட்டுள்ளனர். மஹா மண்டபத்தில் உலோகத்தாலான ரிஷபமும், பரவை நாச்சியார் உடனாய சுந்தரமூர்த்தி நாயனாரும் இடம் பெற்றுள்ளனர். பிரகார வலச்சுற்றில் எண்ணற்ற மூர்த்தங்களை தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தங்களான செப்பு சிலைகள் யாவும் அழகாக இருக்கின்றன. அவற்றுள் மிகவும் அழகாக இருப்பவர் பஞ்சமுக ஹேரம்ப கணபதி. கம்பீரமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ளார். அருகாமையில் வில்லேந்திய வேலர். இக்கோவிலின் மேற்கில் ஆதிக் காயாரோகணம் உள்ளது. அது கட்டுமலை மீது அமைந்துள்ளது. இதில் சட்டையப்பரை தரிசனம் செய்யலாம். எட்டுக் கரங்களில் ஆயுதங்களுடனும், ஒரு கை கதை மீது ஊன்றியும், ஒரு கை அபய முத்திரை கொண்டும், பத்துக் கரங்களுடன் ஆகாச பைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். வெள்ளி மஞ்சத்துடன் கூடிய பெரிய மண்டபத்தில் வெள்ளி பிரபா மண்டலத்திற்குள் காட்சி தருகின்றார். இவரது உக்ரத்தை தணிக்க அமுதவல்லி அம்பிகை அருகாமையில் எழுந்தருளி உள்ளார். கட்டுமலைக்கு தெற்கில் ஆதி காயாரோகணேஸ்வரரும், ஆதி நீலாயதாட்சியும் எழுந்தருளியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.