அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (திருப்புலிவனம்)
God Name : வியாக்ரபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் பூஜித்து வழிபட்ட இறைவன் என்பதால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். புலியால் வலம் செய்யப்பட்ட ஸ்தலம், எனவே புலிவலம்.
வியாக்ர என்றால் புலி, பாத என்பது காலைக் குறிப்பது, எனவே புலிக்கால் முனிவர் என்று பெயர். இவர் மத்யந்த முனிவரின் புதல்வர். வியாக்ரபாதர் பூஜித்த ஒன்பது சிவஸ்தலங்களும் புலிச்வரங்கள் எனவும், இறைவன் புலீஸ்வரராகவும் வழிபடப்படுகின்றன.
இவ்வாலயத்து அர்ச்சகர் பெரும் சிவ பக்தர். முன்நாளில் இறைவனுக்கு சூட்டப்படும் பூமாலைகளை இவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று, தனக்கு பிரியமானவளுக்கு சூட்டி மகிழ்வார். ஒரு நாள், காவலரின் மூலம் மன்னர் ஆலயம் வருவதை அறிந்து, அவளிடமிருந்து மாலையை திரும்பப் பெற்று, பூஜை செய்யலானார்.
அரசன் வந்ததும், பூஜையை முடித்து, பூமாலையை இறைவனிடமிருந்து எடுத்து அரசனுக்கு அணிவித்தார். மாலையில் நீளமான முடி இருந்தது கண்டு, கோபமுற்ற அரசன், குற்றம் செய்தவர்கள் நாளைக்கு தண்டிக்கப்படுவார்கள் என கூறிக் சென்றான்.
சிவ அபராதமும் செய்து மன்னனையும் ஏமாற்றியதால் மிகவும் மனக்கவலை கொண்ட அர்ச்சகர் சரணடைந்தார். அர்ச்சகரை காப்பாற்ற, பிரத்யட்சமான அரசனிடம் அந்த முடி தனது சிகையிலிருந்து வந்ததுதான் என்றுக் கூறி, குடுமியுடன் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு.
அப்பரடிகளின் க்ஷேத்ரக் கோவையிலும், திருவீழிமலை திருத்தாண்டகத்திலும் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. பட்டினத்தாரின் பாடலும் அமையப் பெற்ற ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம், நவ புலீஸ்வரங்களுள் ஒன்று.
வியாக்ரபாதர் பூஜித்த ஒன்பது சிவஸ்தலங்களும் புலிச்வரங்கள் எனவும், இறைவன் புலீஸ்வரராகவும் வழிபடப்படுகின்றன. அவை:
1. திருப்புலிவனம்
2. புலிப்பாக்கம் (செங்கல்பட்டு)
3. புலிப்புரக்கோவில் (மதுராந்தகம்)
4. ஓமாம்புலியூர் (சிதம்பரம் அருகே)
5. புலிவலம் (திருவாரூர்)
6. தப்ளாம்புலியூர் (திருவாரூர்)
7. பெரும்புலியூர் (தஞ்சாவூர்)
8. விளமர் (திருவாரூர்)
9. கோடம்பாக்கம் (சென்னை)
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், அம்பாள்: அமிர்தகுஜாம்பாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வியாக்ரபுரீஸ்வரர். மிக உயரமான பாணமும் சதுர ஆவுடையும் கொண்ட அழகிய லிங்க மூர்த்தம். சுயம்பு லிங்கம். லிங்கத்திருமேனியில் புலிக்கால் நகக் கீறல்களையும், சிரசில் குடுமியையும் காணலாம். இவருக்கு புலீஸ்வரர், திருப்புலி வலமுடையார் ஆகிய திருநாமங்களும் உண்டு.
அம்பாள் அமிர்தகுஜாம்பாள் அழகான திருவுருவத்தை உடையவள். மிகுந்த வரப்ரசாதி.
சிவாலய கோஷ்டத்து மூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தி இருக்க வேண்டிய இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் காணப்படுகிறார். விநாயகர், பாலசுப்ரமண்யர், நவக்ரஹங்கள், சோமாஸ்கந்தர், பைரவர், அஷ்டபுஜ துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையே உள்ள ஏழு படிகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாக அர்ச்சகர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, மூலவருக்கு முன்பாக செல்லும் சுரங்கப் பாதை உத்திரமேரூரிலுள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரை செல்கிறதாம்.
ராஜ யோக சிம்ம தட்சிணாமூர்த்தி எனப்படும் அர்த்தநாரி தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. இடது பாதம் சிங்கத்தின் மீது வைத்தும், வலது பாதம் முயலகன் மீது வைத்தும், இடது பாகம் சக்தியின் அம்சமாகவும், வலது பாகம் சிவனின் அம்சமாகவும் (நடராஜர்) காட்சி தருகிறார். சனகாதி முனிவர்களுடன் வியாக்ரபாதரும் பதஞ்சலியும் காணப்படுகின்றனர்.
வியாக்ரபாதருக்கு சிம்ம தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்த ஸ்தலம்.
அருவுருவு வடிவமான இறைவனின் லிங்கத் திருமேனியை புலி உருவிலுள்ள முனிவர் பூஜிக்கும் காட்சியை புடைப்பு சிற்பமாக தூணில் சித்தரித்துள்ளனர்.
தூங்கானை மாட அமைப்புள்ள கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.