அருள்மிகு பயற்றுநாதர் திருக்கோவில் (திருப்பயத்தங்குடி)
God Name : திருப்பயற்றீசுரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சிவ பக்தரான வியாபாரி ஒருவர் மிளகு மூட்டைகளுடன் பயணித்தார். வழியிலுள்ள சுங்க சாவடியில், மிளகுக்கு அதிக சுங்கவரி கட்ட நேரிடும், அதனால் லாபம் குறையும். இவற்றை தவிர்த்து காப்பாற்ற வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டு விட்டு படுத்து தூங்கினார் வியாபாரி.
காலையில் எழுந்து பயணத்தைத் தொடர்ந்தார். சுங்கசாவடியருகே வரும்போது மூட்டைகள் அவிழ்ந்து அதிலிருந்து பயறு கொட்டியது. சோதித்து பார்த்ததில் அத்தனை மூட்டைகளிலும் பயறு இருந்தன. சுங்க சாவடியைக் கடந்ததும் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின.
மிளகு பயறாக மாறியதால் இவ்வூரை பயற்றூர் என்றும், இறைவனை பயற்றீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
வாணிபத்திலும் பொருள் இறுதியாக உடன் எடுத்து செல்ல முடியாத செல்வம் வேண்டாமென முடிவெடுத்த வியாபாரி, தனது செல்வங்கள் அனைத்தையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து விட்டு, துறவறம் பூண்டு, பின்னர் இறைவனடி சேர்ந்தார் என ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்
மூலவர்: திருப்பயற்றீசுரர், அம்பாள்: காவியங்கண்ணி
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக மிகப் பெரிய திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார் மூலவரான திருப்பயற்றீசுரர்.
நாற்கோண வடிவுடைய ஆவுடையாருடன் கூடிய அழகிய சிவலிங்கம். இவருக்கு முக்தபுரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் காவியங்கண்ணி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். காவி என்றால் குவளைமலர், வடமொழியில் உத்பலம். அம்பாளின் கண்கள் குவளை மலரைப் போன்று இருப்பதால் காவியங்கண்ணி என்று பெயர். வடமொழியில் நேத்ராம்பிகை என்பர்.
நடராஜப் பெருமானும், தட்சிணாமூர்த்தியும், தண்டாயுதபாணியும் அழகான திருவுருவங்கள். வீரமாகாளி சந்நிதியும் உள்ளது. இங்குள்ள மரத்தில் சிலந்தி வடிவத்தில், எட்டு இதழ்களுடன் பூக்கும் மஞ்சள் வண்ண பூ அழகாக உள்ளது. சித்திரை-வைகாசியில் பூப்பதாக சொல்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.