அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் (திருவாலங்காடு)
God Name : வடாரண்யேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பரத முனிவரும் அவரது மனைவி சுபத்திரையும், புத்ர பாக்யம் வேண்டி, இவ்வாலயத்து புத்ர தீர்த்த திருக்குளத்தில் நீராடி சந்தான பிள்ளையாரை நிறுவி வழிபட்டனர். புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றினைச் செய்து இவ்விறைவனை வழிபட்டு மனமுருக வேண்டினர். இவ்விறைவன் அருளால் அன்னை பார்வதியே மகளாக தோன்றினாள் என ஸ்தல வரலாறு.
திருத்துருத்தி வரலாற்றுப்படி அன்னை உமையவள், பரத முனிவரின் வேள்விக் குண்டத்தில் தோன்றினாள் அல்லவா. அதற்கான பிரார்த்தனையையும், புத்ர காமேஷ்டி யாகத்தையும் பரத முனிவர் நடத்திய ஸ்தலம்.
மூலவர்: ஸ்ரீ வடாரண்யேஸ்வரர், அம்பாள்: வண்டார்குழலி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஸ்ரீ வடாரண்யேஸ்வரர். தேஜோமயமாக ஒளி வீசிப் பளிச்சென்றிருக்கும் அழகிய திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி.
கருவறை நுழைவாசலின் இடப்புறம் இரண்டு கணபதிகள் தரிசனம் தருகின்றனர். இருவருள் ஒருவர் சந்தான கணபதி. வலப்புறம் வள்ளி-தெய்வயானை உடனாய ஆறுமுகன். முன்பக்கமாக ஐந்து முகங்களும், பின்புறம் ஒரு முகமும் கொண்ட அழகான திருவுருவம்.
கோஷ்ட மூர்த்தங்களுள் சரஸ்வதி, சூரியன், பைரவர் ஆகிய மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
இறைவனின் முன்பாக உள்ள நந்தி பூமியில் அழுந்தி பாதாள நந்தியாக காட்சி தருகின்றது. இவருக்கு அருகம்புல் சாத்தி வழிபட்டால் பாவங்கள் பாதாளத்தில் அழுந்தி விடுமென நம்பிக்கை.
தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் வண்டார்குழலி எழுந்தருளி அருள் செய்கின்றாள். ஆடி மாதத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு விழா நடத்துகின்றனர். அம்பாள் அணிந்த வளையல்களை அணியும் பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கின்றது.
ஸ்தல வரலாற்றுடன் தொடர்புடைய புத்திரகாமேஸ்வரரை வெளிப் பிரகாரத்திலும், புத்திர காமேஸ்வர புஷ்கரிணியை தென்புறத்திலும் காணலாம்.
எமதர்மராஜனும், சித்திரகுப்தனும் தனித்தனி சந்நிதிகளில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று எருமைப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் எமபயம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.