அருள்மிகு காளீச்வரர் திருக்கோயில் (வில்லியநல்லூர்)

God Name : ஸ்ரீ காளீச்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஆதியில் இவ்வூரில் வில்லவன்-வாதாபி என்ற இரண்டு அசுரர்கள் வாழ்ந்து வந்தனர். தினம் ஒருவரை விருந்துண்ண அழைத்து, வாதாபி எனும் அரக்கனைக் கொன்று கறி சமைத்துப் போடுவான் வில்லவன். விருந்துண்ண வந்தவர் சாப்பிட்டபின், "வாதாபி" என்று உரக்க கூவி அழைப்பான். உண்டவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவான் வாதாபி. பின்னர் இறந்து போன விருந்தாளியை இருவருமாக உண்பார்கள். இந்த அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட எண்ணிய அகஸ்தியர் இவர்களது வீடு தேடிப் போனார். வழக்கப்படி அவரை உபச்சாரம் செய்து அழைத்துப் போய் விருந்திட்டனர். மிச்சம் வைக்காமல் உணவை உண்ட அகஸ்தியர் "வாதாபி ஜீரணோத்பவ" எனக் கூறி வயிற்றைத் தடவினார். அகஸ்தியரின் வயிற்றில் இருந்த வாதாபி ஜீரணமாகி விட்டான். வந்திருப்பவர் அகஸ்தியர் எனத் தெரிந்துகொண்ட வில்லவன், ஊரை விட்டே ஓடிவிட்டான் என்ற கதை ஒன்று இருக்கின்றது. இவ்வூரிலுள்ள பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி-பூ தேவி சகிதமாக நீலமேகப் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.
மூலவர்: ஸ்ரீ காளீச்வரர், அம்பாள்: சிவகாமசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஸ்ரீ காளீச்வரர். அம்பாள் சிவகாமசுந்தரி அழகுத் திருவுருவமாக தரிசனம் தருகின்றாள். பிள்ளையார், முருகன், தட்சிணாமூர்த்தி, சூரிய-சந்திரர்கள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். கோஷ்டத்தில் துர்க்கை இல்லை. முன் மண்டபத்தில் நான்கு முகங்களுடனும் சதுர் புஜங்களுடனும் கூடிய திருவுருவத்தை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.