அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோவில் (தாருகாவனம் - பெருஞ்சேரி)

God Name : வாகீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

நெடுங்காலத்திற்கு முன்பாக தாருகாவனம் எனப் பெயருற்றிருந்த இந்த ஸ்தலத்தில் 48,000 ரிஷிகள் வாழ்ந்து வந்தனர். ஓயாது வேள்விகள் செய்து கொண்டிருந்த அவர்கள் வேதத்தில் கரை கண்டவர்களாக இருந்தனர். வேதங்களில் கூறப்பட்டிருந்த யாக ஹோமங்களை செய்தால் போதும், தெய்வ வழிபாடுகள் தேவையில்லை என்று இருமாந்திருந்த அவர்களுக்கு, புத்தி புகட்ட எண்ணிய சிவபெருமான், அழகிய பிட்சாடனர் வேடம் பூண்டும், திருமால் அழகிய மோகினியாக வேடம் பூண்டும், யாகசாலை நோக்கி வந்தனர். முனிபத்தினிகள் பிட்சாடனரின் அழகில் மயங்கி அவரை பின் தொடர, முனிவர்களோ மோகினியின் பின் சென்றனர். அவர்களது நிலையை அவர்களுக்கு உணர்த்தியதால் கோபம் கொண்ட ரிஷிகள் அபிசார வேள்வி எனும் தீய வேள்வி ஒன்றினை செய்து பிட்சாடனரை அழிக்க முற்பட்டனர். அதிலிருந்து ஏவப்பட்ட மதம் பிடித்த யானையை கிழித்து தோலை உரித்து போர்த்திக் கொண்டார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு. கஜ சம்ஹாரர் என்ற பெயர். (பிட்சாடனரையும், மோகினியையும், கஜ சம்ஹாரரையும் வழுவூர் வீரட்டானத்தில் காணலாம்). சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டவர்களை வீரபத்ரர் தண்டித்தார் அல்லவா. அதில் சரஸ்வதிதேவியின் மூக்கு அறுபட்டது. தனது அங்க குறைபாடு நீங்க வேண்டி இத்தலத்தில் தவமிருந்தாள் சரஸ்வதி. அங்க குறைபாடு நீங்கியது. பிரத்யட்சமான இறைவனிடம் எல்லோருக்கும் வாக்கு வன்மை அளிக்கும் பேற்றினை வரமாக கேட்டுப் பெற்றாள் என ஸ்தல வரலாறு. சந்திரன், தாரா விஷயமாக மிகுந்த மனக்கவலையுடன் பல ஊர்களுக்கு க்ஷேத்ராடனம் போய்க் கொண்டிருந்த ப்ரஹஸ்பதி இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டதும் அவரது கவலைகள் எல்லாம் தீர்ந்தன. வாக் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். இதனால் இறைவன் வாகீஸ்வரர் என்ற பெயர் கொண்டார். அம்பாள் ஸ்வந்தரநாயகி மிகுந்த வரப்ரசாதி.
மூலவர்: வாகீஸ்வரர், அம்பாள்: ஸ்வந்தரநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் வாகீஸ்வரர். சதுர வடிவ ஆவுடையாருடன் கூடிய அழகான திருமேனி. இவருக்கு வாக்கு வள்ளல் என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. குரு பகவான் வழிபட்ட வாகீஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம். அம்பாள் ஸ்வந்தரநாயகி மிகுந்த வரப்ரசாதி என்பர். விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, அண்ணாமலையார் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நான்கு பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் ஒளவால் நெத்தி மண்டபம் எனப்படும் வசந்த மண்டபத்தில் ஸ்தல புராணத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன. உட்பிரகாரத்தில் சிவபெருமானை பூஜிக்கும் சரஸ்வதியின் சிற்பம் மிகவும் அழகாக இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.