அருள்மிகு பாலசுப்ரமண்யஸ்வாமி திருக்கோயில் (திருவிடைக்கழி)
God Name : பாலசுப்ரமண்யர், ஸ்ரீ பாவநாசப் பெருமான்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சூரனின் மகனான இரண்யாசுரனை சம்ஹாரம் செய்து, அதனால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட, முருகப்பெருமான் குரா மரத்தடியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். வதைக்கப்பட வேண்டியவனையே வதம் செய்ததால் தோஷம் ஒன்றுமில்லை. இருப்பினும், முருகனே முன்னோடியாக இதை செய்ததால் சிவபெருமான் மகிழ்ந்து, தோஷத்தை நிவர்த்தி செய்து அருளினார். இந்த ஸ்தலத்தில் முதலிடம் உனக்கே என முருகனை முன் நிறுத்தி தந்தை பின்னால் சென்று விட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதே குரா மரத்தடியில் ராஹுவும் முருகனை பூஜித்து வழிபட்டுள்ளார் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது. எனவே, ராஹுவால் ஏற்பட்ட தோஷம் உள்ளவர்களும் இந்த குரா மரத்தடியில் வந்து வழிபட நன்மை கிடைக்கும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார். குரா மரத்து மலர்கள் முருகன் விரும்பும் மலர்கள். இதன் இலைகள் விஷத்தன்மையை போக்க வல்லது. சேந்தனார் சுவாமிகள் முக்தியடைந்த ஸ்தலம்.
மூலஸ்தானத்தில், நெடிந்துயர்ந்த திருமேனியுடன் அழகிய குமரனாக, கையில் வேலும் காலில் வீரக்கழலும் கொண்டு அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக எழுந்தருளியுள்ளார் பாலசுப்ரமண்யர். பிரம்மாண்டமான மூலவர்க்கு அருகில் ஸ்படிக லிங்கத்தையும் தரிசிக்கலாம். முருகப்பெருமானின் சந்நிதிக்கு உள்ளே உப சந்நிதியில் பிரம்மாண்டமாக தரிசனம் தரும் சிவலிங்க வடிவ மூலவர்க்கு ஸ்ரீ பாவநாசப் பெருமான் என்று பெயர். முருகனுக்கு முக்கியத்துவம் தந்து முன்னால் நிறுத்திவிட்டு, இவர் பின்னால் இருக்கின்றார். மற்றொரு கருவறையில் முருகனும் சிவனும் சேர்ந்து சிவகுமாரனாக, குமாரசிவமாக காட்சி தருகின்றனர். வெளி மண்டபத்தில் நடராஜர் சபையில் வில்லேந்திய வேலன் சபாநாயகராக தரிசனம் தருகின்றார். பிரதோஷ நாயகர், சண்டேசர், சந்திரசேகரர் என அனைத்து மூர்த்தங்களும் சுப்ரமண்ய ஸ்வரூபம் கொண்டு, வலக் கரத்தில் வஜ்ர வேலுடன் காட்சி தருகின்றனர். இங்கு ஸ்ரீ வள்ளிக்கு சந்நிதி இல்லை. ஸ்ரீ தெய்வயானை சந்நிதி கொண்டுள்ளார். முருகனுக்காக காத்திருக்கும் பாவனையில் சற்று தலை சாய்த்து நாணத்துடன் நிற்கும் கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஸ்தல விருட்சமான குரா மரத்தடியில், முருகப்பெருமான் அமர்ந்து பூஜை செய்த சிவலிங்கத்தை தரிசிக்கலாம். ஜாதகத்தில் களத்ர ஸ்தானம் (7ல்) ராஹு இருந்தால், இவரை வழிபட தோஷம் நீங்கும். பிரதோஷ நேரத்தில் உற்சவ மூர்த்தியான முருகன் மயில் மீது உலா வருகின்றார். கரங்களில் வேலும், அம்பும் கொண்டு இரண்யாசுர சம்ஹார மூர்த்தியாக பவனி வருகின்றார். இங்கு வஜ்ரவேலே அஸ்திர தேவராக விளங்குவது விசேஷம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.