அருள்மிகு சார்ந்தாரைக் காத்த சுவாமி திருக்கோவில் (தில்லையாடி)
God Name : ஸ்ரீ சரணாகத ரட்சகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சோழ மன்னனின் கட்டளைப்படி திருக்கடவூர் ஆலயத்தைப் புதுப்பித்த அமைச்சர் இளங்கார முனிவர், தில்லையாடி ஆலயத்தையும் அரசனிடம் கேளாது புதுப்பித்து விட்டார். தன்னைக் கேட்காது தன்னிச்சையாக செய்த இச்செயலினால் கோபமுற்ற மன்னன், அமைச்சரின் கை கால்களை சேதம் செய்ய உத்தரவிடுகிறான். "அமைச்சரின் சிவாலயப் பணிகளை நான் ஏற்றேன்" என சிவபெருமான் அசரீரியாக தெரிவித்தார். மனம் வருந்திய மன்னன் மன்னிக்க வேண்டினான். இறைவனருளால் வெட்டுண்ட கை கால்கள் அமைச்சருக்குத் திரும்பப் பொருந்தின என வரலாறு.
இளங்கார முனிவர் சிதம்பரத்துப் பொற்சபை நடனத்தைக் காண வேண்டியதால், இத்தலத்தில் நடனமாடினார் இறைவன். இதனால் இவ்வூருக்கு தில்லையாடி எனப் பெயர் வந்தது.
மூலவர்: ஸ்ரீ சரணாகத ரட்சகர்் அம்பாள்: ஸ்ரீ பிருஹந் நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சரணாகத ரட்சகர். வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய அழகிய லிங்கம். சார்ந்தாரைக் காத்த சிவன் என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் ஸ்ரீ பிருஹந் நாயகி எனப்படும் பெரிய நாயகி அழகே உருவாக எழுந்தருளியுள்ளார்.
அர்த்த மண்டபத்தில் போக சக்தி அம்பிகையும் பள்ளியறை சொக்கரும் வீற்றிருக்கின்றனர். சுவாமி கோஷ்டத்தை அடுத்துள்ள சந்நிதியில் - கை கால் வெட்டுண்ட நிலையில் இருக்கும் இளங்கார முனிவர்க்கு காட்சி கொடுத்த நாதரை தரிசிக்கலாம்.
நடராஜர், மாணிக்கவாசகர், சோமாஸ்கந்தர், சுப்ரமண்யர், துர்க்கை, சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். திருமால் யானை வடிவம் கொண்டு இவ்விறைவனை பூஜித்து வில்வார்ச்சனை செய்யும் காட்சியை தகட்டு சிற்பமாக கொடிமரத்தில் பொறித்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.