அருள்மிகு மிருகண்டேஸ்வரர் திருக்கோவில் (திருக்கடையூர் - மணல்மேடு)
God Name : மூலவர்: ஸ்ரீ ம்ருகண்டேஸ்வரர்் சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ மார்க்கண்டேயர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
கௌசிக முனிவரின் புதல்வனான ம்ருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்துவதியும், புத்ரபாக்யம் வேண்டி தவம் இருந்தனர். பிரம்மனின் கணக்குப்படி, 16 வயது வரை மட்டுமே வாழக்கூடிய புத்திரனைப் பெற்றனர். மார்க்கண்டேயன் எனப் பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்து சிவபெருமானின் பக்தனாக இருந்தான். 16 வயது பூர்த்தியாகும் தருணத்தில் அவன் உயிரைக் கவர யமன் வந்தான்.
ஸ்ரீ சந்திரசேகராஷ்டகம் பாடிக் கொண்டே சிவபூஜையில் யமன் பாசத்தை வீசினான்.
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக் கொண்டான். சிவலிங்கத்துடன் சேர்த்து மார்க்கண்டேயனை இழுத்தது யமனின் பாசக் கயிறு. லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் யமனை காலால் உதைத்து தள்ளி சூலத்தால் அழுத்தி நின்றார். இவரே கால சம்ஹார மூர்த்தி. சிவபூஜையிலிருந்தவன் மீது பாசக்கயிறு வீசியது தவறு என்பதை உணர்த்தி, கடமையை செய்ய யமன் வந்ததால் அவனை மன்னித்து உயிர்பிச்சை கொடுத்தார். மார்க்கண்டேயனுக்கு சாகாவரமாக என்றும் 16 எனும் வரம் அளித்தார். பின்னர் லிங்கத்திற்குள் மறைந்தார் என ஸ்தல வரலாறு.
பங்குனி மாத அஸ்வதி நட்சத்திரத்தன்று சிவபெருமான் கங்கா தீர்த்தத்தை மார்க்கண்டேயருக்காக வரவழைத்த நாள். மார்க்கண்டேயருக்கு விதித்த அற்ப ஆயுளைப் போக்கி பூரண ஆயுஷ் தரவேண்டி பூஜை செய்த ஸ்தலமும் இதுவே.
மூலவர்: ஸ்ரீ ம்ருகண்டேஸ்வரர்் சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ மார்க்கண்டேயர்் அம்பாள்: ஸ்ரீ மருத்துவதி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ம்ருகண்டேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ மருத்துவதி அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். ஸ்ரீ மார்க்கண்டேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார். மார்க்கண்டேயர் அமைத்த சிவலிங்கமும் தவச்சாலையும் உள்ளன.
மூலவரை நோக்கி நந்தியம் பெருமான் - ஒரு தொட்டியில் கழுத்தளவு நீரில் ஜலவாசம் செய்கின்றார். பிரதோஷ நாள் தவிர்த்து, மற்ற நாட்களில் ம்ருகண்டேஸ்வரருக்கு செய்யும் அபிஷேக நீர் தொட்டிக்குள் செலுத்தப்பட்டு, அதில் வாசம் செய்கிறார். பக்தர்கள் இந்த தீர்த்தத்தை புரோக்ஷணம் செய்து கொள்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.