அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில் (திருத்தலைச்சங்காடு)

God Name : மூலவர்: சங்காரண்யேஸ்வரர்் உற்சவர்: சோமாஸ்கந்தர் மற்றும் பிரதோஷ நாயகர்.

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சங்கு போன்ற அமைப்பிலுள்ளது. மஹாவிஷ்ணு இவ்விறைவனை வழிபட்டு பாஞ்சசன்யம் எனும் சங்கினைப் பெற்றதாக வரலாறு. சங்குப் பூக்கள் மலரும் தோட்டங்கள் மிகுந்து இருந்ததாலும், இவ்விறைவனுக்கு அம்மலர்களைச் சாத்துவதாலும், சங்கு வடிவில் கோவில் இருப்பதாலும் இவ்வூர் தலைச்சங்காடு (தலை-சங்கு-காடு) எனப் பெயர் பெற்றது. இறைவனுக்கு சங்காரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்தது. இவ்வூரைப் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலவர்: சங்காரண்யேஸ்வரர்் உற்சவர்: சோமாஸ்கந்தர் மற்றும் பிரதோஷ நாயகர்் அம்பாள்: சௌந்தர நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான சங்காரண்யேஸ்வரர். சங்கு போன்ற உருண்டை வடிவம். லிங்கத்தின் மீது நல்லெண்ணையை தடவி, விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் மயிர்க்கால்கள் தெரியும் அதிசயம் காணலாம். சுயம்பு மூர்த்தம். அம்பாள் சௌந்தர நாயகி பெயருக்கேற்றாற்போல் சௌந்தர்யமான தோற்றத்துடன் தரிசனம் தருகின்றாள். கோவில் வாசலில் உள்ள சங்கநிதி, பதுமநிதி திருவுருவங்கள் மற்றும் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. விஷ்ணுவிற்கு தனி சந்நிதி உள்ளது. இடதுபுறம் சிவன், நடுவில் முருகன், வலது புறம் அம்பிகை என சந்நிதிகள் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பாகக் கருதப்படுகின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.