அருள்மிகு விஸ்வரூப லட்சுமிநரசிம்மஸ்வாமி திருக்கோயில் (கட்டவாக்கம்)

God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தின் மூலவராக ஸ்ரீ லட்சுமிநரசிம்மஸ்வாமி யோகாசனக் கோலத்தில் பிரம்மாண்டமான ஆகிருதியுடன் தரிசனம் தருகிறார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தனது மடிமீது மஹாலட்சுமி தாயாரை இருத்தி விஸ்வரூப தரிசனம் தருகிறார். மேற்கரங்களில் சக்கரம், வில், அம்பு ஆகியன கொண்டும், கீழ்க்கரங்களில் அபய-வரத ஹஸ்தம் கொண்டும், சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி. மூன்று கண்கள், கோரைப்பற்கள், வஜ்ர நகங்கள் ஆகியன கொண்டு, நாகத்தை பூணூலாக தரித்து தரிசனம் தரும் எழிற்கோலம். பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டமான திருமேனி (16 அடி உயரம்). ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் என பஞ்சாசனங்கள் கொண்டு, கம்பீரமாக ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். (ஆதிசேஷன் உயரத்தையும் சேர்த்து கணக்கிட்டால் 25 அடி உயரம்). நெற்றிக்கண்ணாக அங்காரகனும், வலது - இடது கண்களாக சூரிய - சந்திரர்களும், சுக்ரன் நாசியாகவும், குருபகவான் மேல் உதடு, கீழ் உதட்டில் புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி என அனைத்து கிரகங்களும் இவருள் அடக்கம் என பட்டாச்சாரியார் தெரிவிக்கிறார். பெருமாளின் இடது பக்கம் தாயார் லட்சுமி பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். பெருமாளுக்கு குடைபிடிக்கும் ஆதிசேஷன் மீது சாளக்கிராம கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெருமாளின் திருமேனி பீடத்துடன் 25 அடி உயரமும், 15 டன் எடையும் கொண்டது. பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட உற்சவர் திருமேனி அழகாக உள்ளது. பெரிய திருவடி, சிறிய திருவடி சன்னதிகளும், ஆண்டாள் சன்னதியும் அமைய உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.