அருள்மிகு வலம்புரிநாதர் திருக்கோவில் (மேலப்பெரும்பள்ளம்)
God Name : வலம்புரிநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
திருவலஞ்சுழி எனும் ஸ்தலத்தில், காவிரியிலிருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.
காவிரியை வெளிக் கொணரும் பொருட்டு அந்த பள்ளத்தில் இறங்கிய ஏரண்ட முனிவர் இங்கு கரையேறினார்.
வலமாக வந்து இவ்வூர் கரையேறியதால் வலம்புரம் எனப் பெயர் கொண்டது.
ஏரண்ட முனிவரின் முடியில் ஏற்பட்ட பள்ளம் போல் சுவாமியின் முடி மீதும் பள்ளம் காணப்படுகிறது. இதனால் இவ்வூர் மேலப்பெரும்பள்ளம் எனப் பெயர் கொண்டது.
விஷ்ணு இவ்விறைவனை வழிபட்டு வலம்புரி சங்கினைப் பெற்றார். ஸ்தலங்கள் தோறும் தரிசித்துக் கொண்டிருந்த அப்பர் சுவாமிகளை இறைவன் இத்தலத்திற்கு வரவழைத்து தரிசனம் தந்ததாக வரலாறு.
மனைவியின் கற்பை சோதிக்க எண்ணிய அரசன் ஒருவன், வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, தான் இறந்து விட்டதாக பொய் தகவல் அனுப்புகிறான். அதை கேள்விப்பட்ட அரசியார் உயிர் துறக்கிறாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் அரசனைப் பற்றிக் கொண்டது.
தோஷத்தைப் போக்கிக் கொள்ள ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்யும்படியும் அப்போது அரண்மனை வாசலில் மணி ஒலிக்கும் எனவும் தோஷம் நீங்கிவிடும் எனவும் அரசனுக்கு அறிவுறுத்தப்பட்டது. தினமும் இக்கோவிலில் அன்னதானம் செய்தனர். பட்டினத்தடிகள் ஒரு நாள் இங்கு வந்து உணவளிக்குமாறு வேண்டினார்.
அவருக்கு உணவு தரப்படவில்லை. பின்பக்கமாக சென்று மடப்பள்ளியிலிருந்து வெளி வரும் வடித்த கஞ்சியை இரு கைகளாலும் அள்ளி குடித்தார். அப்போது அரண்மனை மணி ஒலித்தது. அரசனின் தோஷமும் நீங்கியது.
மன்னன் சென்று பட்டினத்தாரை வரவேற்கும் நிகழ்வை ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
மூலவர்: வலம்புரிநாதர், அம்பாள்: வடுவகிர்கண்ணம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வலம்புரிநாதர். சிவலிங்கத்தின் பாணம் புற்றின் வடிவிலுள்ளது. லிங்கத்தின் திருமுடியில் ஒரு பள்ளம் காணப்படுகின்றது. இதனால் சாம்பிராணி தைலமும் புணுகும் சாத்தப்படுகின்றது. குவளை சாத்தி அபிஷேகம் செய்கின்றனர். சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. வாசுகி வழிபட்டதால் சிவலிங்கத்தின் பாணம் புற்றின் வடிவிலுள்ளது எனக் கூறப்படுகிறது.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் வடுவகிர்கண்ணம்மை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஸ்வர்ண பத்மாம்பிகை என்ற பெயரும் உண்டு. அழகான திருவுருவம்.
வல்லப விநாயகரிடம் ஆசி பெற்று, வலச்சுற்றிலுள்ள தெய்வங்களை தரிசிக்கலாம். முக்குறுணி விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், கஜலட்சுமி, சூரியன், சனீஸ்வரர், பைரவர், நால்வர் மற்றும் மனைவியுடன் தட்சன் ஆகியோரை தரிசிக்கலாம்.
உற்சவ மூர்த்தியான சந்திரசேகரர், ராகு - கேது லிங்கம், கிராத மூர்த்தியின் வெண்கலச் சிலை ஆகியன பேரெழில் கொண்டவை. வீணையுடன் காணப்படும் பிட்சாடனரின் திருவுருவம் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகையுடையது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.