அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (சித்தமல்லி)

God Name : ஸ்ரீ கைலாசநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

நந்தி தேவரிடம் உபதேசம் பெற்ற சிவயோகி ஒருவர், க்ஷேத்ராடனம் செய்து கொண்டு வரும் வழியில், தெற்கு - வடக்காக காவிரி பாயும் ரம்யமான இக் கிராமத்தைக் கண்டதும், இங்கேயே தங்கிவிட ஆசை கொண்டார். மல்லிகை மலர்களால் இறைவனை அர்ச்சித்து, தமது ஆத்மார்த்தமான பூஜைகளை செய்து வந்தார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் நேரில் பிரத்யட்சமாகி கூடு விட்டு கூடு பாயும் சித்திகளை அருளினார். சித்தரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கேயே கைலாசநாதராக கோவில் கொண்டார். இந்த சித்தரே மாடு மேய்க்கும் மூலன் என்பவனின் உடலில் புகுந்து வந்து, திருமூலர் என்ற பெயரில் உலகுக்கு திருமந்திரத்தை உபதேசித்தவர். சித்தரால் மல்லிகை மலர்கள் கொண்டு அர்ச்சித்து பூஜித்ததால் இவ்வூர் சித்தமல்லி எனப் பெயர் பெற்றது.
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர்் அம்பாள்: காமாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர். அழகு திருவுருவமாக தரிசனம் தரும் ஸ்ரீ காமாட்சி அன்னை மிகுந்த வரப்பிரசாதி. சிறப்பு மூர்த்தமாக ஸ்ரீ அஷ்டபுஜ ஆனந்த துர்க்கை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மகிஷாசுர வதம் முடித்த பராசக்தி ஆனந்த தாண்டவம் ஆடினாளாம். அதே ரூபத்தில் இங்கு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இரட்டை சண்டிகேஸ்வரர்களைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.