அருள்மிகு பஞ்சவடீஸ்வரஸ்வாமி திருக்கோவில் (ஆனந்ததாண்டவபுரம்)
God Name : ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
நினைத்த நேரத்தில் நினைத்த ஸ்தலத்திற்கு சென்று சிவதரிசனம் செய்துவிட்டு திரும்பும் யோக வல்லமையுடையவர் ஆனந்த முனிவர். நித்ய சிவதரிசனத்தை முடித்துக் கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்க தன்னுடைய ஊரான ஆனதாண்டபுரத்திற்கு வந்து விடுவார்.
இவரை சோதிக்க எண்ணிய இறைவன் பெருமழையை பெய்ய வைத்து இவ்வூரை விட்டு அவர் நகரமுடியாமல் செய்து விட்டார். இரவு வரை மழை தொடர்ந்து பெய்ததால் சிவதரிசனம் செய்ய முடியாது போனது. இதனால் மனம் வருந்திய முனிவர் தனது உயிரை துறக்க முற்பட்டார். அவர்முன் பிரத்யட்சமான நடராஜர் சிவகாமி சஹிதம் ஆனந்த விமானத்தில் எழுந்தருளி, ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டினார். தில்லை அம்பலத்து ஆருத்ரா தரிசனத்தை இங்கேயே காட்டுகிறார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு.
அது நாள் வரை தில்லையம்பதி என்ற பெயரிலிருந்த தில்லை, இறைவன் இங்கே வந்து விட்டதால் சித் - அம்பரம், சிதம்பரம் - அதாவது வெற்றிடம் எனப் பெயர் கொண்டது. (காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை இங்கேயே இருந்தாராம் இறைவன் - இன்றும் 10.30 மணிக்கு மேல்தான் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் என கூறுகின்றனர்)
ஆனந்த முனிவர்க்கு ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டிய சம்பவம் நிகழ்ந்த ஊர் என்பதால் ஆனந்ததாண்டவபுரம் என பெயருற்றது. தற்போது ஆனதாண்டபுரம் என அழைக்கின்றனர்.
மானக்கஞ்சாறர் எனும் சிவபக்தன் தனது மகள் புண்யவர்த்தினிக்கு திருமணம் செய்ய நிச்சயித்து, ஏயர்கோன் கலிக்காமர் என்பவரை மணமகனாக தேர்ந்தெடுத்தார். திருமண நாளன்று மாப்பிள்ளை கலிக்காமரை வரவேற்க காத்திருந்தார் மானக்கஞ்சாறர்.
இவரை சோதிக்க எண்ணிய இறைவன் ஜடாதரன் போன்ற சிவனடியார் தோற்றத்தில் அங்கு வந்தார். இரண்டு திருமண வீட்டாரும் அவரை வரவேற்று உபசரித்தனர். மணப் பெண்ணை அழைத்து ஜடாதரனுக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னார்கள். பெண்ணைப் பார்த்த ஜடாதரன் இவளது நீண்ட கூந்தல் நமது பஞ்சவடிக்கு ஆகும் எனக் கூறினார். உடனே உடைவாளை உருவி கூந்தலை வெட்ட முற்பட்டார் சிவபக்தனான மானக்கஞ்சாறர். (பஞ்சவடி என்றால் முடிக்கற்றையாலான பூணூல் வடம்)
ஜடாதரன் மேலும் கூறியதாவது ஐயா பெண்ணின் கூந்தலை அவளது தாய் பிடித்திருக்க, தந்தையாகிய நீ கூந்தலை வெட்டும்போது, மணப்பெண் அழாமலிருக்க வேண்டும். அப்படி வெட்டித் தந்த கூந்தலை நான் பெற்றுக் கொள்வேன் என்றார். அவர் கூறியபடியே அனைத்தும் செய்து முடித்தனர்.
கூந்தலைப் பெற்றுக் கொண்ட ஜடாதரன் மறைந்து அந்த இடத்தில் ரிஷபாரூடராக இறைவன் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு. கூந்தலை பஞ்சவடிக்காக கேட்டுப் பெற்றதால் அவருக்கு பஞ்சவடீஸ்வரர் எனும் திருநாமம்.
ஸ்தல விருட்சத்தினடியில் தவம் மேற்கொண்ட பரத்வாஜ மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க, இளமையான தோற்றத்தில் கல்யாணசுந்தரியும், வயது கூடி திருமணமானவளாக பெரியநாயகியும் இறைவனாருடன் தரிசனம் தந்தனர் என்று மேலும் கூறுகிறது ஸ்தல வரலாறு.
தைப்பூச உற்சவத்தின்போது 6ம் நாள் புண்யவர்த்தினியின் கல்யாணமும், 7ம் நாள் பஞ்சவடீஸ்வரரின் திருக்கல்யாண உற்சவமும் ஐதீகமாக கொண்டாடப்படுகின்றது. ஆடியில் சண்டி ஹோமம்.
தை மாசம், பூசம், பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்த தினத்தன்று மாவிளக்கு போட்டு பிராரத்தனை செய்தால் புத்ர பாக்யம் கிட்டும்.
கருடன் தனது தாயாருக்காக அம்ருதம் கொண்டு செல்கையில் ஒரு துளி இங்குள்ள குளத்தில் விழுந்ததாகவும் இதனால் இதில் மூழ்கி நீராடுபவர்களுக்கு வியாதி நிவாரணியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
தேவார வைப்புத்தலம்
மூலவர்: ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர். அம்பாள் (இரண்டு): ஸ்ரீ பெரிய நாயகி, ஸ்ரீ கல்யாண சுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர். ஒளி வீசும் அழகிய திருமேனி.
பஞ்சவடிக்காக கூந்தலை கேட்டுப் பெற்றதால் பஞ்சவடீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். பாரிஜாதவனேஸ்வரர், கைலாஸநாதர் ஆகிய பெயர்களும் உண்டு. பஞ்சகவ்ய அபிஷேகம் விசேஷம் என்பர்.
கிழக்கு நோக்கிய சந்நிதியில் கல்யாண சுந்தரியும், தெற்கு நோக்கிய சந்நிதியில் ப்ரஹந் நாயகி எனப்படும் பெரிய நாயகியும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். இரண்டு அம்பிகைகளின் திருவுருவங்களும் அழகானவை.
விசேஷ மூர்த்தியாக ஸ்வயம்பு விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். மானக்கஞ்சாறர், புண்ணியவர்த்தினி, ஏயர்கோன் கலிக்காமர் ஆகியோரின் செப்புத் திருமேனிகளும், ஆனந்த முனிவர், பரத்வாஜர் ஆகியோரின் சிலா விக்ரகங்களும் காணப்படுகின்றன. பிரயோக சக்கரத்துடன் துர்க்கை தரிசனம் தருகின்றாள்.
வேறு எங்கும் காண முடியாத நடராஜரின் திருவுருவம் இங்கு தரிசிக்கலாம்.
திருவடியை சாய்வு இல்லாமல், திருமேனியில் சரிபாதியாக தூக்கி நிறுத்தி, முகத்திற்கு நேராக வைத்து, ஆனந்த தாண்டவம் ஆடியருளிய நிலையை சித்தரிக்கும் விக்ரஹம். ஆடலரசனோடு ஒட்டியிராமல் திருவாசி தனியாக இருப்பதும் தனி அழகு. மூக்கு நுனியின் நடுப்பகுதியிலிருந்து நூல் பிடித்து பார்த்தால் வலது - இடது திருவடிகளும், அபய-வரத கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் அடங்குவதாக அமைந்துள்ளது.
திருவாசியின் துணையில்லாமல் முயலகனின் பிடிப்பில் மட்டும் தனியாக நிற்கும் நடராஜர் சிலை. ஐந்தாக முடிந்து வைக்கப்பட்ட ஜடாமுடி, குடுமி நுனியில் எலும்பு மணிகள், நெற்றியில் குழைத்திட்ட திருநீறு, காதுகளில் குண்டலங்கள், இடையில் செருகிய திருநீற்றுப் பை இவைகளைக் கொண்டும், கமண்டலதாரியாகவும் தோற்றமளிக்கும் ஜடாதரனின் பஞ்சலோக விக்ரஹம் - பார்த்துக் கொண்டேஇருக்கத் தூண்டும்.
பிரகார வலச்சுற்றில் அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
ஸ்ரீ ராஜசேகர தீட்சிதரை குருவாகக் கொண்டு யஜீர் வேத பாடசாலை ஒன்றும் இவ்வூரில் இயங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.