அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோவில் (குறிச்சி)
God Name : மூலவர்: லட்சுமிநாராயணப் பெருமாள்் சிறப்பு மூர்த்தம்: கல்யாணராமன்.
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
முன்பு லட்சுமி நாராயணரும் புஷ்பவல்லித் தாயாரும் இங்கு சேவை சாதித்துக் கொண்டிருந்தனர். விஸ்வாமித்ரரின் வேள்வியைக் காக்க வந்த ராமன் இந்த பெருமாளையும் தாயாரையும் வழிபட்டுள்ளதாக கூறுகின்றனர். வசிஷ்டருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்ரீ ராமபிரான், ராவண வதம் முடித்து திரும்புகையில் கல்யாண கோதண்டராமராக தரிசனம் தந்தார். அதே கோலத்தில் சேவார்த்திகளுக்கு இங்கு சேவை சாதிப்பதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. விவாஹத்தடை இருப்போர் கல்யாணராமனை சேவித்து பலன் பெறுகின்றனர்.
மூலவராக லட்சுமிநாராயணரும், தாயார் புஷ்பவல்லியும் சேவை சாதிக்கின்றனர். திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தரும் ராமபிரான் இங்கு விசேஷ மூர்த்தமாக சேவை சாதிக்கின்றார். வடக்குப் பிரகாரத்தில் ஆஞ்சநேயரையும், தெற்குப் பிரகாரத்தில் கிருஷ்ணர் மற்றும் கருடாழ்வாரையும் சேவிக்கலாம். வசிஷ்டரின் திருவுருவம் இடம் பெற்றுள்ளது. கருடாழ்வாருக்கு பாலபிஷேகம் செய்தால் நீல நிறமாக மாறி, தரையில் விழும்போது மீண்டும் வெள்ளையாக மாறுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.