அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோவில் (கூழமந்தல்)

God Name : பேசும் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

புதுக்கோட்டை

Call : +91-

இவரது முன்பாக நின்று வணங்கும்போது, இவர் நம்மை பார்த்துப் புன்முறுவல் செய்வது போன்றும், நம்மிடம் பேசுவது போன்றும் காட்சி தரும் அமைப்பில் இருப்பதால், பேசும் பெருமாள் எனப்படுகின்றார். கூழன் என்றால் பலாப்பழ மரத்தைக் குறிப்பதாகும். சாலையின் இரு மருங்கிலும் பலா மரங்கள் வரிசையாக இருந்ததினால் இவ்வூருக்கு கூழமந்தல் என்று பெயர்வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக சேவை சாதிக்கும் பெருமாள் மிகவும் வரப்பிரசாதி என்பர். பன்னிரெண்டு அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி உடையவர். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். சாளக்ராம மாலை அணிந்துள்ளார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். அழகிய உற்சவ மூர்த்தியும் மூலவரைப் போன்றே உள்ள தோற்றத்தில், சாளக்ராம மாலை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார். ருக்மணி சத்யபாமா உடனாய வேணுகோபாலனின் உற்சவ விக்ரகங்கள் அழகாக இருக்கின்றன. ஆண்டாள் மற்றும் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம். கங்கைகொண்ட சோளீஸ்வரர் கோவில் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.