அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் (மயிலாடுதுறை)
God Name : ஐயாறப்பன்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரப்பள்ளி என்னும் ஊரில் நாதசர்மா என்னும் சிவபக்தர் வாழ்ந்துவந்தார். அவரது மனைவி அநவித்யாவுடன் தினமும் திருவையாற்று கோயிலுக்குச் சென்று சுவாமி ஐயாறப்பனையும், அன்னை அறம் வளர்த்த நாயகியையும் வழிபடுவது வழக்கம்.
ஐப்பசி மாதக் கடைமுழுக்கு அன்று துலாகட்டத்தில் நீராட ஆசை கொண்டு இருவரும் மயிலாடுதுறை வந்தனர். இரவு வெகு நேரம் ஆனபடியால், கடைமுழுக்கு நீராடல் செய்ய இயலவில்லை. ஆசையுடன் நீராட வந்ததும் நிறைவேறாததாலும், மறுநாள் திரும்பிச் சென்று ஐயாறப்பனையும் தரிசிக்க முடியாது என்பதாலும் வருந்திக் கொண்டே இரவுப் பொழுதை கழித்தனர்.
அப்போது அவர்களது கனவில் தோன்றிய சிவபெருமான், மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக நீராடினால், கடைமுழுக்கு ஸ்நான பலன் கிட்டும் என்றும், மயூரநாதர் கோயிலுக்கு மேற்கிலுள்ள கோயிலில், அம்பிகை அறம் வளர்த்த நாயகியுடன் தாம் ஐயாறப்பராக எழுந்தருளியிருப்பதாகவும் கூறினார்.
அதன்படி இருவரும் விடியற்காலை துலாக்கட்டம் சென்று ஸ்நானம் செய்துவிட்டு, இவ்வாலயம் வந்து ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அபயாம்பிகையையும் மயூரநாதரையும் தரிசனம் செய்தனர். பின்னர் இருவரும் மயூரநாதருடன் ஐக்கியமானார்கள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலவர்: ஐயாறப்பன், அம்பாள்: அறம் வளர்த்த நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஐயாறப்பன் எழுந்தருளியுள்ளார். சந்நிதியின் முன்பாக அப்பர் சுவாமிகள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் நிலையில் கருங்கல் சிலை ஒன்று இருக்கிறது. பொதுவாக கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்தங்கள் அல்லாது, அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மகாமண்டபத்தின் அருகே அம்பாள் அறம் வளர்த்த நாயகி தனி சந்நிதி கொண்டு தரிசனம் தருகிறார். தாமரை மலர், சங்கு மாலை ஏந்திய மேற்கரங்கள், அபய-வரத முத்திரைகளையுடைய கீழ்க்கரங்கள் ஆகிய சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவத்துடன் காட்சி தருகிறார்.
பிரகார வலச்சுற்றில் - பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், மகாவிஷ்ணு, கஜலட்சுமி, வடகயிலைநாதர், தென் கயிலைநாதர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
சித்திரை மாதத்தில் சப்தஸ்தான திருவிழா 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அமாவாசை நாட்களில் அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.