அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோவில் (கீழைத் திருக்காட்டுப்பள்ளி)
God Name : ஆரண்யேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பிரம்மாவிடம் பல வரங்கள் பெற்ற விருத்தாசுரன் எனும் அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் இம்சித்து வந்தான். இவனை அடக்கப் புறப்பட்ட தேவேந்திரன் அவனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். விருத்தாசுரனைக் கொன்ற பழி பாவம் நீங்கவும், மீண்டும் தேவலோகத்தை ஆளவும், தேவேந்திரனும், தேவர்களும் வழிபட்டு பூஜித்த லிங்கம் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஆரண்யேஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஆரண்யேஸ்வரர். சதுர ஆவுடை கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்க மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி. ஆரண்ய முனிவர் வழிபட்டு பூஜித்ததால் ஆரண்யேஸ்வரர் என்று பெயர் கொண்டார்.
ஸ்வாமிக்கு இடப்பக்கமாக தெற்கு பார்த்து அம்பாள் அகிலாண்டேஸ்வரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஸ்வாமி - அம்பாள் சந்நிதிகளை ஒருசேர தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
விசேஷ மூர்த்தமான நண்டு பூஜித்த விநாயகர் அழகாக இருக்கின்றார். பீடத்தில் நண்டின் உருவம் காணலாம். மூஷிகம் இல்லை.
வழக்கமாக நான்கு சீடர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இங்கு ஆறு சீடர்களுடன் தரிசனம் தருகின்றார். இவரது சந்நிதிக்கு மேற்கில் கடல் அலை போன்ற ஒலி மதிற்சுவரில் தொடர்ந்து கேட்கப்படுகின்றது.
ஒரு அடி உயரமே உள்ள சிறிய வடிவ நடராஜர் கொள்ளை அழகு. சிவகாமி உடனாய நடராஜர் படிமங்கள் அற்புதமானவை. இரண்டு பாணங்களுடன் உள்ள ஒரே லிங்கம், தசலிங்கம், பிரம்மேசர், முனியீசர், சுப்ரமண்யர், பைரவர், சூரியன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.