அருள்மிகு தாலபுரீஸ்வரர் திருக்கோயில் (திருவன்பார்த்த பனங்காட்டூர்)

God Name : தாலபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

இத்தலம் பனைமரக்காடாக இருந்தமையால் "பனங்காடு" எனப் பெயர் கொண்டது. பனைமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஐந்து ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. பிரம்மாவின் மானஸ புத்ரர்களில் ஒருவரான புலஸ்தியர், தன் மகனான அகஸ்தியர் வழிபட்ட இத்தலத்திற்கு வந்து, சுயம்புலிங்கத்தைத் தேடி, தரிசனம் கிடைக்காது போனதால் தாமே ஒரு லிங்கம் அமைத்து பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அந்த லிங்கமே கிருபாநாதேஸ்வரர். சுயம்புவான தாலபுரீஸ்வரரை - புலஸ்தியருக்கு காட்சி தரவேண்டுமென்று அம்பிகை கேட்டுக் கொண்டதால், அம்பிகைக்கு "கிருபா நாயகி" என்று பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. நண்பகல் வேளையில் நடந்து வந்த களைப்பும், பசியும் கொண்ட சுந்தரர் இத்தலமருகே வந்தபோது, முதியவர் வடிவில் வந்த இறைவன் அவருக்கு கட்டமுது படைத்தார் என்றும், தண்ணீர் பருக நீர்ச்சுனை ஒன்றை உண்டாக்கினார் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. தாலபுரீஸ்வரருக்கு மாசி மகம் விசேஷம். கிருபாநாதேஸ்வரருக்கு கார்த்திகை சோமவாரம் விசேஷம். அகஸ்தியர் பூஜித்த பொழுது பனம்பழத்தை நைவேத்யம் செய்ததால், இப்போதும் (கிடைக்கும் காலங்களில்) அதே நைவேத்யம் தொடர்கிறது. ஜடாகங்கை குளத்தருகே கங்கா தேவியின் சிலை உள்ளது. இங்கு எதிரொலி கேட்கின்றது. ஸ்தல விருட்சங்களான ஆண்பனை மற்றும் பெண்பனை இரண்டும் ஒரே மரத்தின் விதைகளிலிருந்து முளைத்தவை என்பது கூடுதல் விசேஷம்.
மூலவர்: தாலபுரீஸ்வரர், அம்பாள்: அமிர்தவல்லி - மூலவர்: கிருபாநாதேஸ்வரர், அம்பாள்: கிருபா நாயகி. மூலஸ்தானத்தில் மூலவரான தாலபுரீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவ ஆவுடையாருடனும், பெரிய பாணத்துடனும் காட்சி தரும் அழகிய சுயம்பு லிங்கம். இவருக்கு "பனங்காட்டு நாதர்" என்ற பெயரும் உண்டு. அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் இது. அம்பாள் அமிர்தவல்லி உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். இவளுக்கு "ஸ்தூல கோமள மரகதாம்பிகை" மற்றும் "ஸ்தூல கோமள மரகதாம்பாள்" ஆகிய பெயர்களும் உண்டு. மற்றொரு மூலஸ்தானத்தில் கிருபாநாதேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சதுரபீட ஆவுடையாருடனும், குட்டையான பாணத்துடனும் காட்சி தரும் அழகிய சுயம்பு லிங்கம். புலஸ்தியர் வழிபட்ட லிங்கம் இது. அம்பாள் கிருபா நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். தாலபுரீஸ்வரரை முதலில் வணங்கி, பின்னர் கிருபாநாதேஸ்வரரை வணங்குவது இங்கு சம்ப்ரதாயமாக உள்ளது. வள்ளி, தெய்வானை உடனாய முருகனுடன் கூடிய மயிலின் முகம் திசை மாறி உள்ளது. தட்சிணாமூர்த்தியின் வடிவம் பேரழகு கொண்டது. வித்தியாசமான தோற்றத்தில் சூரிய-சந்திரர்கள் உள்ளனர். வன்னி மரத்தடியில் சனீஸ்வர பகவானை தரிசிக்கலாம். இவ்வாலயம் கஜப்பிருஷ்ட விமானம் கொண்ட அமைப்பில் உள்ளது. கோட்டை முனீஸ்வரர் ஆலயம்: யோகாநந்த முனீஸ்வரர் மூலவராக எழுந்தருளியுள்ளார். ஜடாமுடியுடன் தரிசனம் தருகின்றார். பின்னாலுள்ள பனைமரங்களை ஆதி ஸ்தல விருட்சங்கள் என்பர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.