அருள்மிகு உக்ரநரசிம்மர் திருக்கோவில் (திருக்குறையலூர்)

God Name : மூலவர்: உக்ர நரசிம்மர், உற்சவர்: சக்கரத்தாழ்வார்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

திருமங்கை மன்னன் பிறந்த குறையலூரின் அருகே தேவராஜபுரம் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு கொள்ளிடக் கால்வாயும், அதனருகே மண்டபமும், மண்டபத்தினருகே அரச மரமும் உள்ளன. இந்த இடத்தில்தான் திருமங்கை ஆழ்வார் வழிப்பறி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனருகேயுள்ள திருமணங் கொல்லை எனும் ஊரிலும் வழிப்பறி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தை அமாவாசையன்று, திருநகரியிலிருந்து புறப்பட்டு குறையலூர், மங்கை மடம், நாங்கூர் ஆகிய ஸ்தலங்களை மங்களாசாஸனம் செய்வார். திருமங்கை ஆழ்வார் நாங்கூரின் பஞ்சநரசிம்ம க்ஷேத்ரங்களையும் பூஜித்து வழிபட்டுள்ளார். இத்தலம் நாங்கூர் பஞ்ச நரசிம்ம ஸ்தலங்களுள் ஒன்றாகும்.
மூலவர்: உக்ர நரசிம்மர், உற்சவர்: சக்கரத்தாழ்வார், தாயார்: அமிர்தவல்லி. மூலஸ்தானத்தில் உக்ர நரசிங்கப் பெருமாள் ஆஜானுபாகுவாக, வீற்றிருக்கும் கோலத்தில் கம்பீரமாக சேவை சாதிக்கிறார். வெள்ளி கவசம் அணிந்து, மார்பில் முக்கோண சக்கரம் தாங்கி, சாளக்ராம மாலை அணிந்து காட்சி தருகிறார். அருகில் உற்சவ மூர்த்தியான சக்கரத்தாழ்வாரையும் தரிசிக்கலாம். ஏழு படிகள் ஏறிச் சென்று கருவறையை அடைய வேண்டும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.