அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் (குரங்கணில்முட்டம்)

God Name : வாலீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

குரங்கு வடிவத்தில் வாலியும், அணில் வடிவம் கொண்ட இந்திரனும், முட்டம் வடிவில் யமனும் (முட்டம் என்றால் காகம்) சிவபெருமானை இங்கு வழிபட்டதால், இவ்வூர் குரங்கணில்முட்டம் எனப் பெயர் பெற்றது. கோவிலின் வாசலில் - குரங்கு பூஜிப்பதை வடபாலும், அணிலும் - காக்கையும் பூஜிப்பதை தென்பாலும் சுவர் சிற்பங்களாக காட்டியுள்ளனர். ரிக்ஷரஜசு என்னும் குரங்கு ஆணாக இருந்து பின்னர் பெண்ணாக மாறியது. ரிக்ஷரஜசுவுக்கும் இந்திரனுக்கும் பிறந்த வாலி குரங்கு வடிவம் கொண்டவன். பல சிவன் கோவில்களுக்கும் சென்று வழிபடுபவன் வாலி. இத்தலம் வந்ததும் இவ்விறைவனை பூஜித்து, குரங்கு ரூபம் நீங்கி, மனித உடலும், குரங்கு முகமும் பெற்றான் என ஸ்தல வரலாறு. இந்திரனுக்கும் இவ்விறைவனை வழிபட ஆசை வந்ததால் அணில் வடிவம் கொண்டு, இங்கு வந்து இவ்விறைவனை பூஜித்து பிறவி நீக்கம் பெற்றான். அவ்வாறே யமனும் காக்கை வடிவம் கொண்டு இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு வினை நீக்கம் பெற்றான் என ஸ்தல வரலாறு.
மூலவர்: வாலீஸ்வரர், அம்பாள்: பூரண கங்கண தாரிணி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வாலீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். மேற்கு பார்த்து காட்சி தரும் அழகிய, சிறிய லிங்கத் திருமேனி. கொய்யாமலர் நாதர் என்றொரு திருநாமமும் உண்டு. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் பூரண கங்கண தாரணி எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகான திருவுருவம். இறையார் வளையம்மை என்று தூய தமிழில் அழைக்கின்றனர். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. பிரகார வலச்சுற்றில் மூஞ்சூறுடன் கூடிய விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், நால்வர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பைரவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வித்தியாசமான கோலத்தில் காணப்படும் விஷ்ணு துர்க்கை அழகாக இருக்கின்றாள். பிரயோக சக்கரமும், சக்கர முத்திரையும் கொண்டுள்ளார். திருவடிகளின் கீழ் மகிஷனின் உருவம் இல்லை. ஆலயத்தைச் சுற்றிலும் காக்கை மடு தீர்த்தமும், யம தீர்த்தமும் அகழி போல் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.