அருள்மிகு திருத்தாளமுடையார் திருக்கோயில் (திருக்கோலக்கா)
God Name : திருத்தாளபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஞானசம்பந்தர் சிவஸ்தல யாத்திரையை ஆரம்பித்ததும் வந்த முதல் இடம் திருக்கோலக்கா. குழந்தை சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி, தாளமிட்டு பதிகம் பாட ஆரம்பித்ததும், குழந்தையின் கைகள் வலிக்குமே என இவ்விறைவன் இரண்டு பொற்றாளங்களைக் கொடுத்தான். அந்த பொற்றாளங்களுக்கு ஓசையை அருளினாள் அம்பாள். இதனால் இறைவன் தாளபுரீஸ்வரர் என்றும் அம்பாள் ஓசை கொடுத்த நாயகி என்றும் பெயர்களைக் கொண்டனர்.
இத்தலத்தில் சூரியன் தன் பெயரால் தீர்த்தம் ஒன்றை அமைத்து, இங்கு தவம் மேற்கொண்டு, இறைவனை வழிபட்டு, மூவுலகங்களின் தலைவனாகும் வரத்தையும், தன்னை வணங்குபவர்கள் நிகரற்ற செல்வத்தை அடையும்படியான வரத்தையும் பெற்றான்.
மகாலட்சுமி இத்தலத்தில் தவமிருந்து மகாவிஷ்ணுவை மீண்டும் கணவனாக அடைந்தாள். இவளுக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்பவர்களுக்கு திருமணப்பேறு நிச்சயம்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: திருத்தாளபுரீஸ்வரர், அம்பாள்: ஓசை கொடுத்த நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் திருத்தாளபுரீஸ்வரர். அழகிய சுயம்பு மூர்த்தம். சப்தபுரீஸ்வரர் என்றும் இவரை அழைப்பார்கள்.
அம்பாள் ஓசை கொடுத்த நாயகி அழகான திருவுருவம். தொனி பிரதாம்பாள் என்றொரு திருநாமம்.
கோஷ்ட மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்றின் பரிவாரத் தேவதைகளும் அழகாக இருக்கின்றன. முகப்பில் காணப்படும் ரிஷபாரூடரின் சுதைசிற்பமும், பொற்றாளங்களுடன் காணப்படும் ஞானசம்பந்தரும் மிகவும் அழகான சிற்பங்கள்.
இங்குள்ள மகாலட்சுமி மிகுந்த வரப்பிரசாதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.