அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் (கூரம்)

God Name : ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்

தேவநாத சுவாமி கோவில்

Call : +91-

கூரம் எனும் ஊரின் தலைவனாக இருந்து பரிபாலனம் செய்து வந்தவர் ஸ்ரீவத்ஸாங்கன் என்ற இயற்பெயரை உடையவர். வரதராஜப் பெருமாளின் பரம பக்தர் எனப் போற்றப்படும் கூரத்தாழ்வாரின் அவதாரத் தலம் இது. அபாரமான குருபக்தி மிக்கவர். ஸ்ரீ ராமானுஜரின் பிரதான சீடர். விஷ்ணுவைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வழிபடக்கூடாது எனப் பிரசாரம் செய்து வந்த ராமானுஜர் மீது கோபம் கொண்ட சோழ மன்னன், ராமானுஜர் தனது ராஜசபைக்கு வந்து விளக்கம் தர வேண்டும் என அறிவித்தான். குருவுக்கு தண்டனை ஏதும் வந்துவிடுமோ எனப் பயந்த சீடர் கூரத்தாழ்வார், குருவைக் காப்பாற்றும் நோக்கத்தில், குருவின் காவி உடைகளை உடுத்திக்கொண்டு, அரசன் முன்னால் போய் நின்று, தாமே ராமானுஜர் என்று தெரிவிக்கப் போவதாகக் கூறி, அரசவை சேர்ந்த கூரத்தாழ்வார், தானே ராமானுஜர் என உரைத்து, தர்க்கம் செய்தார். மன்னன் வெகுண்டு அவரது இரு கண்களையும் பிடுங்கினான். ராமானுஜரும் ஸ்ரீநாராயணபுரம் சென்றார். இன்றளவும் வெள்ளை சாத்துப்படி உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் குருவின் யோசனைப்படி வரதராஜப் பெருமாளை சேவிக்கச் சென்றவர், பெருமாளையும், குருநாதரையும் பார்க்கும் நேரம் மட்டும் கண்பார்வை இருந்தால் போதும் எனப் பிரார்த்தித்துக் கொண்டார். ராமனின் அவதாரமாகக் கருதப்படும் கூரத்தாழ்வார், சௌம்ய வருஷம் தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தார். கூரத்துப் பெருமாளை சேவிக்க வரும் சேவார்த்திகளுக்கு திருவாராதனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரிய மணிகள் கோர்க்கப்பட்ட அவரது மாளிகையின் கதவு, கோயில் நடை சாத்திய பிறகே மூடப்படும். கதவு மூடப்படும் ஒலி வெகுதூரம் வரை கேட்கும். ஒரு நாள் அவரது மாளிகையின் காவலர்கள் கோயில் நடை சாத்திவிட்டதாகக் கருதி கூரத்தாழ்வாரின் மாளிகை கதவை மூடி விட்டார்கள். திருவாராதனம் முடியும் முன்னரே காவலாளிகளின் தவறால் கதவு சாத்தப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, தனது செல்வங்களை எல்லாம் துறந்து சந்நியாசியாகி விட்டார் கூரத்தாழ்வார். பின்னர் ராமானுஜரின் சீடரானார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. குரு பக்தியினைக் காண்பிக்க தனது கண்களை இழந்த கூரத்தாழ்வாரின் ஸ்தலத்தில், கண்களில் உபாதை கொண்டவர்கள், நேத்ர பரிகாரத்திற்கென ரூ.51/- செலுத்தி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
மூலவர்: ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், தாயார்: பங்கஜவல்லி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக சேவை சாதிக்கிறார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் எழுந்தருளியுள்ளனர். வலது பக்கமாக பங்கஜவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். கூரேசவல்லி என்ற திருநாமமும் உண்டு. கூரத்தாழ்வார் பூஜித்த விக்ரகங்கள் இங்கு உள்ளன. பிரகார வலச்சுற்றில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரை சேவிக்கலாம். கூரத்தாழ்வாருக்கு தனி சந்நிதி உள்ளது. ஸ்ரீ ராமர் - சீதாதேவி விக்ரகங்கள் அழகாக உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.