அருள்மிகு அம்பிகாபதீஸ்வரர் திருக்கோயில் (கீழம்பி)
God Name : அம்பிகாபதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
காஞ்சியில் மணல் லிங்கம் அமைத்து காமாட்சியம்மை வழிபட்டு வந்த நாட்களில், அன்னைக்கு தோழியாக வந்த
அம்பிகா என்னும் பெண், கீழம்பியில் ஒரு நந்தவனம் அமைத்து, அதிலிருந்து மலர்களைப் பறித்து, தினமும்
வழிபாட்டிற்கு அனுப்பி வந்தாள். நந்தவனத்தில் ஒரு சிவலிங்கமும் நிறுவி பூஜித்து வந்தாள். அந்த சிவலிங்கமே
அம்பிகாபதீஸ்வரர். பின்னாளில் காமாட்சியன்னை இங்கு கோயில் கொண்டாள் என ஸ்தல வரலாறு.
காஞ்சி மடத்தின் 60வது பீடாதிபதி - ஸ்ரீ அத்யாத்ம பிரகாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம்
அமையப் பெற்றுள்ளது. காஞ்சி மஹாஸ்வாமிகளுக்கு மிகவும் இஷ்டமான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று
என்கின்றனர். அடிக்கடி இங்கு வந்து ஈஸ்வரனையும், அம்பாளையும் பூஜித்து தியானம் செய்வார்
மஹா ஸ்வாமிகள்.
கம்பரும், அவரது மனைவி நிகர்த்தவல்லியும் கீழம்பியில் நீண்ட நாட்கள் தங்கி அம்பிகாபதீஸ்வரரை
பூஜித்து புத்ர பாக்யம் வேண்டினர். இவ்விறைவனின் அருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு அம்பிகாபதி
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் என ஸ்தல வரலாறு.
எம். எஸ். சுப்புலட்சுமி குடும்பத்தினர் ஒரு ட்ரஸ்ட் நிறுவி, ஆலயத்தின் நித்ய பூஜைகளுக்கு உதவுவதாக
தெரிவிக்கின்றனர். காஞ்சி சங்கர மடம் நிறைய உதவிகளை செய்துள்ளது.
மூலவர்: ஸ்ரீ அம்பிகாபதீஸ்வரர், அம்பாள்: காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் மூலவரான ஸ்ரீ அம்பிகாபதீஸ்வரர்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அன்னை காமாட்சி எழுந்தருளியுள்ளார்.
திருமாளிகைப் பத்தியுடன் கூடிய பிரகாரத்தில் விநாயகப் பெருமான், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர்,
நவக்ரஹங்கள் மற்றும் சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் மிக
அழகாக உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.