அருள்மிகு தேவநாதஸ்வாமி திருக்கோவில் (திருவஹீந்திரபுரம்)
God Name : மூலவர்: தெய்வநாயகன். உற்சவர்: மூவராகிய ஒருவன்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
அஹிந்திரன் என்பது ஆதிசேஷனின் பெயர்களில் ஒன்று. ஆதிசேஷன் தவம் புரிந்து பேறு பெற்ற ஸ்தலம் என்பதால் திருவஹிந்திரபுரம் எனப் பெயர் கொண்டது. திரு ஆகிய பூமியை வகிண்டு (பிளந்து) ஆதிசேஷனால் நீர் கொண்டு வரப்பட்டதால் திருவகிந்திரபுரம் என்றானதாகவும் கூறுவர்.
மகரிஷிகள் பலரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுந்தம் சென்றனர். திருவஹிந்திரபுரம் எனும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் மார்க்கண்டேய மகரிஷி மற்றும் பூமா தேவிக்கு அருள் பாலிக்க சென்று விட்டார் விஷ்ணு என அறிந்து, மிகுந்த வருத்தம் கொண்டனர். பின்னர் திருவஹிந்திரபுரத்திற்கு விரைந்து வந்து, இங்கு தவம் புரிந்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு தாங்களும் தவமிருந்தனர்.
அவர்களுடைய தவத்தினால் மகிழ்ந்த விஷ்ணு, அவர்கள் விரும்பிய கோலத்தில் தேவநாதஸ்வாமியாக இங்கு சேவை சாதித்தார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு.
மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனாக, திருமகள் இங்கு குழந்தையாக அவதரித்தாள். தரங்கமுக நந்தினி எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்தாள். விஷ்ணு அவளை மணந்தார் என ஸ்தல வரலாறு.
திருமாலுக்குத் தேவைப்பட்ட தீர்த்தத்தைக் கொண்டு வர, கருடன் பறந்து சென்று வெகு நேரம் ஆகியும் தீர்த்தத்துடன் வரவில்லை. ஆதிசேஷன் தனது வாலால் பூமியை அடித்து பிளந்து, தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார். அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர். இது தற்போது கிணறாக கோவிலுக்குள் உள்ளது.
பாதாள லோகத்திலிருந்து விரஜை எனும் தீர்த்தத்தை கருடன் கொண்டு வந்தார். அதுவே தற்போது கெடில நதி எனப்படுகிறது. சேஷ தீர்த்தம் நைவேத்யம் செய்யவும், கருட தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
கெடில நதி இங்கு தெற்கு வடக்காக ஓடுவதால் உத்தரவாகினி என்பார்கள்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: தெய்வநாயகன், உற்சவர்: மூவராகிய ஒருவன், தாயார்: செங்கமலவல்லி.
மூலஸ்தானத்தில் தெய்வநாயகன் எனப்படும் தேவநாதஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தேவர்களுக்குத் தலைவனாக இருந்து போரிட்டதால் தேவநாதன் எனும் திருநாமம் கொண்டார்.
தனிக்கோவிலில் செங்கமலவல்லித் தாயார் எழுந்தருளி தரிசனம் தருகிறாள். இவருக்கு வைகுந்த நாயகி, அம்ருதவாஸினி, ஹேமாம்புஜவல்லி, பார்கவி என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
உற்சவ மூர்த்தியாக மூவராகிய ஒருவன் சேவை சாதிக்கிறார். பேரெழிலுடன் விளங்கும் திருமேனி. இவரை அச்சுதன், திவிஷத்நாதன், தாஸஸத்யன், அடியார்க்கு மெய்யன் என்றெல்லாம் அழைப்பார்கள்.
இங்குள்ள உற்சவ மூர்த்தி - ருத்ரனுக்குரிய ஜடாமுடி மற்றும் நெற்றிக்கண், திருமாலுக்குரிய சங்கு சக்கரம், பிரம்மாவுக்குரிய தாமரை மலர் ஆகியன கொண்டு காட்சி தருவதால், மூவராகிய ஒருவன் எனும் திருநாமம் பெற்றார்.
பெருமாளிடம் மன்னிப்பு கேட்கும் நிலையில் கை கட்டிய கோலத்தில் இருக்கும் கருடாழ்வார், அரிதான தரிசனம். வலக்கரத்தில் கோதண்டம் கொண்ட ராமர், தில்லைவளாகத்திற்கு இணையான அழகிய திருமேனி. சீதா தேவியும் லட்சுமணனும் உடன் உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.