அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் (அம்பகரத்தூர்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

துர்வாச முனிவரின் சாபம் கொண்ட மதலோலை எனும் அசுரப் பெண்மணி, இரண்டு தீயப் புதல்வர்களைப் பெற்றாள். அந்தரத்தில் செல்லும்போது (அம்பரத்தில்) பிறந்த குழந்தை அம்பரன் என்றும், அழுது கொண்டே பிறந்த குழந்தை அம்பன் என்றும் பெயர் கொண்டனர். அசுரகுரு சுக்ராச்சார்யாரின் யோசனைப்படி இருவரும் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களைக் கேட்டனர். இருவரும் ஒற்றுமையாக இருக்கும் வரை அழிவில்லை என வரம் தந்தார். அவர்கள் பல பெண்களை களவாடி வந்து இன்பம் துய்த்தனர். இதனால் பயந்த தேவர்களும் முனிவர்களும் முறையிட்டனர். பார்வதியிடம் அவர்களை அழிக்கும் வேலையை பணித்தார். உமாதேவியின் கோப சக்தியில் தோன்றிய காளி அழகான பெண் ரூபத்திலும், திருமால் வயோதிகர் வடிவத்திலும், இத்தலத்திற்கு வந்தனர். இந்த பெண்ணின் பேரழகில் மயங்கிய அம்பன்-அம்பரன் இருவரும் அவளை அடைய முற்பட்டனர். உங்களில் பலசாலியான ஒருவரே இப்பெண்ணை மணக்கலாம் என வயோதிகர் கூறவே, அவர்கள் இருவரும் போரிட்டனர். போர் இறுதியில் அம்பரன் அம்பனைக் கொன்று விட்டான். உடனே அழகான பெண் தனது சுயரூபமான காளியாக மாறி அம்பரனின் தலையை வாளால் வெட்டி சம்ஹாரம் செய்தாள். இந்த நிகழ்வு நடந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பியுள்ளனர். கொலை செய்த பாவம் நீங்க மாகாளி அரிசிலாற்றில் நீராடினாள்.
மூலஸ்தானத்தில் அன்னை மாகாளி எனப்படும் அஷ்டபுஜ பத்ரகாளி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். மூலவராகவும் உற்சவராகவும் தரிசனம் தருகின்றாள். சூலத்தை ஏந்திய மேற்கரங்கள், அபய ஹஸ்தமும் பாண பாத்திரமும் கொண்ட கீழ்க்கரங்கள் ஆகியன கொண்டு அழகான பெரிய திருவுருவமாக காட்சி தருகின்றாள். சிவலிங்கத்தை காளி பூஜை செய்வது போன்ற சுவர் சிற்பம் ஒன்று அழகாக உள்ளது. பரிவார தேவதைகள் மற்றும் உற்சவ திருமேனிகள் அனைத்தும் பேரெழில் கொண்டவையாகும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.