அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் திருக்கோவில் (வீராம்பட்டினம்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வரும் இவ்வூரைச் சேர்ந்த மீனவர் ஒருவர், ஒரு நாள் வலை வீசியபோது மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வலை வீசியதில் பெரிய மரத்துண்டு ஒன்று அகப்பட்டது. மீன் ஏதும் கிடைக்காத ஏமாற்றத்தோடு வீடு திரும்பிய மீனவர், மரக்கட்டையை வீட்டின் கொல்லைப் புறத்தில் போட்டு வைத்தார். அடுப்பில் எரிக்க விறகு தேவைப்பட்டதால், மீனவரின் மனைவி இந்த மரத்துண்டைக் கோடரி கொண்டு பிளந்தாள். அதிலிருந்து ரத்தம் பீறிடவே, பயந்து போன அவள் ஊராரைக் கூட்டினாள். ஏதோ தெய்வ சக்தி இருப்பதை உணர்ந்து, அந்த மரக்கட்டையைப் பூஜித்து வரலானார்கள். மீனவரின் கனவில் தோன்றி அன்னை தன்னைப் வெளிப்படுத்திக் கொண்டாள். அன்னை கனவில் வந்து கூறியபடி, செங்கழுநீர் அம்மன் என்ற பெயர் சூட்டி, மரத்துண்டைப் பிரதிஷ்டை செய்து, திருமுகம் மற்றும் திருவுருவம் செய்து பிரதிஷ்டை செய்து பூஜிக்கலானார்கள். கனவில் குறிப்பிட்ட இடத்தில் பெரிய புற்று ஒன்று இருப்பதைக் கண்டனர். அதிலிருந்து கிளம்பிப் படம் விரித்தாடிய நாகம் ஒன்று, குறிப்பிட்ட இடத்தில் பூமியில் மூன்று முறை ஓங்கி அடித்து, கோவில் கட்ட வேண்டிய இடத்தை தேர்வு செய்தது. அதே இடத்தில் ஆலயம் எழுப்பினார்கள்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. கடலில் இருந்து சுயம்புவாகக் கிடைக்கப்பெற்ற மரக்கட்டையைப் பீடமாக வைத்து, கழுத்துக்கு மேற்பட்ட தலையோடு கூடிய திருமுகத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். அன்னை ரேணுகையின் அம்சமாக வீற்றிருக்கின்றாள். ஆறடி உயரம் கொண்ட முழுத் திருவுருவம் ஒன்றையும் தேவதாரு மரத்தால் உருவாக்கிப் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், துர்க்கை, புற்று அம்மன், சப்த கன்னியர்கள், நவகிரகங்கள், அய்யனார் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.