அருள்மிகு வடுகீஸ்வரர் திருக்கோவில் (ஆண்டார் கோவில்)
God Name : வடுகீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
சிவபெருமானைக் குறித்து தவம் செய்த முண்டன் எனும் அரக்கன், வரங்கள் பல பெற்று, அனைவரையும் இம்சித்து கொடுமைப் படுத்தி வந்தான். சிவனாரின் கட்டளைப்படி வடுக பைரவர் தோன்றி அவனை சம்ஹாரம் செய்தார்.
முண்டனைக் கொன்ற தோஷம் நீங்க, பைரவ மூர்த்தி இங்கு சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டார்.
வடுகன் வழிபட்டதால் இவ்விறைவன் வடுகீஸ்வரர் என்கிற வடுகநாதர் என அழைக்கப்பட்டார். இவ்வுரும் வடுகூர் எனப் பெயர் கொண்டது. வடு என்றால் பிரம்மச்சாரி அல்லது இளைஞன் என்று பொருள். குமார பருவத்தில் இருப்பதால் பைரவர் வடுகர் எனப்படுகின்றார்.
அஷ்டபுஜ துர்க்கை, அர்தநாரீஸ்வரர், பிரதோஷ நாயகர், இடது புறமாக திரும்பி காட்சி தரும் மயில் வாகனத்துடன் சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
விநாயகர் - மூத்தப்பிள்ளை, முருகன் - இளையபிள்ளை, சம்பந்தர் - ஆளுடையப்பிள்ளை, சண்டிகேஸ்வரர் - சேஞ்சலூர்பிள்ளை என சைவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது போல் பைரவருக்கு ஆண்டபிள்ளை என்று உள்ளது. ஆண்டபிள்ளை வழிபட்ட ஸ்தலமாதலால், ஆண்டார்கோயில் என்று அழைக்கப்படுகின்றது.
முதலாம் பராந்தக சோழன் காலத்து ஆலயம்.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: வடுகீஸ்வரர், அம்பாள்: வடுவகிர்க்கண்ணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வடுகீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். இடது பக்கம் சாய்ந்தவாறு காட்சி தருகிறார். இவருக்கு பஞ்சநதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
தெற்கு நோக்கிய சந்நிதியில் வடுவகிர்க்கண்ணி அம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கிழக்கு நோக்கிய சிவாலயம்.
இங்கு பைரவர் வழிபாடு விசேஷமானது. கார்த்திகை மாத அஷ்டமி தினங்களில் சிறப்பு விழா கொண்டாடப்படுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.