அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)

God Name : முத்தீஸ்வரர்

திருவாரூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: காசிப முனிவரின் பத்னிகளான கத்ரு, சுபருனை இருவரும் எப்போதும் கருத்து வேறுபாடு கொண்டு தர்க்கம் செய்வார்கள். இருவரில் யார் அழகில் சிறந்தவள் என்ற பிரச்சனையை தர்க்கமாகக் கொண்டு, கணவன் கூறும் தீர்ப்புப் படி நடக்கவும், தோற்றவள் சிறைபடவும் ஒப்புக்கொண்டனர். அதன்படி கத்ருவே அழகி என கணவன் கூற, சுபருனையை சிறைபடுத்தினாள் கத்ரு. சுபருணையின் மகனான கருடன் தன் தாயை மீட்க வழி கேட்டான். அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால் விடுவிப்பதாக கூறுகிறாள் கத்ரு. அமிர்தம் எடுத்து வர தேவலோகம் சென்று இந்திராதி தேவர்களுடன் சண்டையிட்டு அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு வந்து தாயிடம் தருகிறான் கருடன். தன் தாய் வணங்கிய சிவலிங்க மூர்த்தமான முத்தீஸ்வரரை வழிபட்ட கருடனுக்கு இறைவனின் தரிசனம் கிடைத்ததாக வரலாறு. தன் கடமையை முடித்த கருடன், திருமாலுக்கு வாகனமானான். இந்த ஸ்தலத்தில் தோன்றிய திருக்குறிப்புத் தொண்டர் தினமும் ஒரு சிவனடியாரின் துணியை இலவசமாக துவைத்து கொடுத்துவிட்டு பின்னரே ஊர் மக்களின் துணிகளை தோய்க்கும் கொள்கையுடையவர். இவரை சோதிக்க எண்ணிய இறைவன் வேடத்தில் வந்து துணியை துவைக்கக் கொடுத்து, பல கஷ்டங்கள் தந்து அவரை சோதித்து பின் ஆட்கொண்டதாக வரலாறு. திருக்குறிப்புத் தொண்டர் 63 நாயன்மார்களில் ஒருவராகி விட்டார் என வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக முத்தீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். விநாயகர், கருடேஸ்வரர், கோஷ்ட தெய்வங்கள், வள்ளி தேவசேனா சமேத முருகன் ஆகிய மூர்த்திகளையும், திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் உருவச்சிலையையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.