அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில் எனப்படும் விளக்கொளி பெருமாள் திருக்கோவில் (காஞ்சி)

God Name : ஸ்ரீ தீபப்பிரகாசர் எனப்படும் விளக்கொளி பெருமாள்

தீர்த்தமலை கோவில்

Call : +91-

'தண்' என்றால் குளிர்ச்சி, 'கா' என்றால் சோலை. குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்துள்ள ஸ்தலம் என்பதால் திருத்தண்கா எனப் பெயர் கொண்டது. முற்காலத்தில் தர்ப்பை புல் அடர்ந்திருந்த பகுதியாக விளங்கியதால் தூப்புல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. விளக்கின் ஒளி வெளிச்சத்தைத் தருவது போல், சுய ஸ்வரூபம், ஜீவான்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம் என்னும் அர்த்த பஞ்சகத்தை திருமங்கையாழ்வாருக்கு அருளியதால் தீபப்பிரகாசர் என்று திருநாமம் பெற்றார். பத்தினியின்றி யாகம் ஆரம்பித்த பிரம்மனுக்கு பாடம் புகட்ட, யாகத்தை அழிக்க வேகமுடைய ஆறாக (வேகவதி) பாய்ந்து வந்தாள் சரஸ்வதி. தூப்புல் பகுதி முழுவதையும் நீர்ப்பெருக்கால் நிறைத்து, இருட்டாக்கினாள். அந்த இருளை அகற்றி, ஒரு பெரும் ஜோதி வடிவமாக பிரம்மனுக்கு காட்சி தந்தார் பெருமாள். இதன் பயனாக பிரம்மனின் யாகம் நன்கு நிறைவேறியது. அந்த ஜோதி வடிவத்திலேயே விளக்கொளி பெருமாளாக இங்கு நிலை கொண்டார் என ஸ்தல வரலாறு. மீண்டும் அசுரக் கூட்டத்தை ஒரு தீப்பந்தாக மாற்றி ஏவினாள் சரஸ்வதி. அந்த தீப்பந்தை, தீப்பிழம்பாக மாற்றி தனது கரங்களில் ஏந்திக்கொண்டார் தீபப்பிரகாசர் என ஸ்தல வரலாறு மேலும் தெரிவிக்கின்றது.
மூலவர்: ஸ்ரீ தீபப்பிரகாசர். தாயார்: மரகதவல்லி. மூலஸ்தானத்தில் மூலவர் ஸ்ரீ தீபப்பிரகாசர் சேவை சாதிக்கின்றார். மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். இவருக்கு விளக்கொளிப் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு. உற்சவ மூர்த்தி ஸ்ரீ தேவி - பூதேவி சஹிதமாக சேவை சாதிக்கின்றார். மரகதவல்லித் தாயார் பச்சை வண்ண திருமேனியுடன், கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள், கருடன், ஆழ்வாராதிகள் மற்றும் வேதாந்த தேசிகர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். வேதாந்த தேசிகரின் வைபவம் முழுதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இது வேதாந்த தேசிகரின் அவதார ஸ்தலம். ஆதிபதேசம்: (ஆலடிப் பிள்ளையார் தெருவில், கீரை மண்டபம் பக்கத்தில் உள்ளது) ஆதிபதேசம் என்னும் பெயரில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, வரம் பெற்று, வேகவதி நதியை தடுத்தார் திருமால். பின் விளக்கொளியாய் நின்றார் என ஸ்தல வரலாறு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.