ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோவில் (ஆதி திருவரங்கம்)

God Name : ஸ்ரீ ரங்கநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

விழுப்புரம்

Call : +91-

தேவர்களின் மேன்மைக்குக் காரணம் வேதங்களே என எண்ணிய சோமுகாசுரன், நான்கு வேதங்களையும் அபகரித்துக் கொண்டு, கடலுக்கடியில் ஒளிந்து கொண்டான். மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு வந்தார். பின்னர் இத்தலத்தில், அரவணையில் சயனித்து, இளைப்பாறியவாறு, நான்முகனுக்கு மீண்டும் வேதோபதேசம் செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. தேவர்களின் பிரார்த்தனைப்படி, அர்ச்சாவதாரமாக இங்கேயே சேவை சாதிக்க சம்மதித்த பெருமாள், விஸ்வகர்மாவை அழைத்து, பாற்கடலில் தான் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தை நிர்மாணிக்கச் செய்தார். தன்னொளி இழந்த சந்திரன், இத்தலத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, பெருமாளை வழிபட்டு நலம் பெற்றான் என ஸ்தல வரலாறு. சுருதகீர்த்தி எனும் மன்னன் புத்திர பாக்கியம் வேண்டி பிரார்த்தித்து, இவ்வரங்கனின் கிருபையால் புத்திரர்களைப் பெற்றான் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது. தென்பெண்ணை ஆற்றின் கரையில் இவ்வாலயம் அமைந்திருப்பதும், அருகேயுள்ள ஜம்பை எனும் ஸ்தலத்தில் நீருக்கடியில் ஜம்புநாத ஈஸ்வரர் எழுந்தருளியிருப்பதும், பெண்ணையாற்றின் தென் கரையிலுள்ள கள்ளிப்பாடி எனும் ஊரில் மாத்ருபூதேஸ்வரர் இருப்பதும் ஸ்ரீ ரங்கத்தை போலவே இருந்தாலும், ஆதிதிருவரங்கமே மிகப் பழமையானது என்பர். திரேதா யுகத்து மத்ஸ்ய அவதார நிகழ்வுகளைக் கொண்ட ஸ்தலம் என்பதால் ஆதி திருவரங்கம் எனப் போற்றப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ ரங்கநாதர், தாயார்: ஸ்ரீ ரங்கநாயகி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், ஐந்து தலை அனந்தன் மீது, நெடியோனாகப் பள்ளி கொண்டு சேவை சாதிக்கின்றார். வடக்கே திருவடிகள் நீட்டி, தென் திசையில் திருமுடி வைத்து, கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, மிகப் பெரிய திருமேனியுடன் நமது கண்களையும் மனதையும் நிரப்பும் தரிசனம். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் இடப்பக்கமும், வலப்பக்கம் பெரிய திருவடியும், நாபிக் கமலத்தில் நான்முகனும் இருக்கின்றனர். ஸ்ரீ தேவி, பூதேவி சகிதம், நின்ற கோலத்தில் உற்சவ ரங்கநாதர் சேவை சாதிக்கின்றார். ஆண்டாளின் உற்சவ விக்ரஹம் அழகாக இருக்கின்றது. ஸ்ரீ ரங்கநாதரின் திருவடி பாதுகைகளை சேவிக்கலாம். கருடாழ்வாரும், ஆதிசேஷனும் அருகருகே ஒரே சந்நிதியில் காட்சி தந்து சேவை சாதிப்பது கூடுதல் விசேஷம் என்கின்றனர். மூலவர்க்கு தைலக்காப்பு மட்டுமே - திருமஞ்சனம் எல்லாம் உற்சவ மூர்த்திக்குத்தான். தனிக்கோவிலில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றாள். மேற்கரங்களில் தாமரை மலர்கள் ஏந்தியும், கீழ்க்கரங்கள் அபய - வரத ஹஸ்தங்களாகவும் கொண்டு தரிசனம் தருகின்றாள். உற்சவ தாயாராக ரங்கவல்லித் தாயார் சேவை சாதிக்கின்றாள். ஊஞ்சல் மண்டபம் அருகேயுள்ள கோதண்டராமர் சந்நிதியில், ஆறடி உயர திருமேனி கொண்ட அழகிய ஸ்ரீ ராமரையும், கைகட்டி வாய் பொத்தி நிற்கும் பவ்ய ஹனுமனையும் சேவிக்கலாம். பிரகார வலச்சுற்றில் சக்கரத்தாழ்வார், வரதராஜர், வேதாந்த தேசிகர், விஷ்வக்சேனர் மற்றும் வரப்பிரசாதியான துர்க்கை ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். வீர ஆஞ்சநேயர் வரப்பிரசாதியாக திகழ்கிறார். அழகு வாய்ந்த மண்டபங்களும், ஒவ்வொரு ஸ்வரத்தில் இசை எழுப்பும் சிற்பத் தூண்களும் கொண்ட மிகப் பழமையான ஆலயம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.