அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் (அந்திலி)
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விழுப்புரம்
Call : +91-
நாராயணன் எங்கு சென்றாலும் கருடன் மீது ஏறிச் செல்வார். பிரகலாதனை காப்பாற்றும் அவசரத்தில் தூணில் தோன்றியதாலும், கஜேந்திரனைக் காப்பாற்றும் அவசரத்தில் இருந்ததாலும் கருடன் இல்லாமல் செல்ல நேரிட்டது. இதனால் வருத்தமுற்ற கருடன், தனது கவலை நீங்க இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார். நீண்ட தவம் இருந்ததால் பலசாலியான கருடன் பலவீனமானார். கருடனின் கடுந்தவத்தால் மகிழ்ச்சியுற்ற நாராயணன் பிரத்யட்சமாகி, "வேண்டுவன கேள்" என்றார். பிரகலாதனை காப்பாற்ற தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம கோலத்தில் சேவை சாதிக்க கருடன் வேண்டினார். கருடனின் விருப்பப்படியே தரிசனம் கிடைத்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கோவில் எழுப்பப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்ரீ வியாஸராஜர் இங்கு சில காலம் தங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. மாத்வ சம்பிரதாய வழிபாடு பின்பற்றப்படுகிறது. இது அஷ்ட நரசிம்ம ஸ்தலங்களுள் ஒன்று.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சாந்தமே உருவாக எழுந்தருளியுள்ளார். அவரது மடியில் லட்சுமி தேவி அமர்ந்து அருள்புரிகின்றார். வருடம் முழுவதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. இயற்கையாகவே கருடன் வடிவிலுள்ள பாறையின் மீது அமைந்த கோவில், ஒரு குன்றின் மேல் இருக்கின்றது. ஒரே கல்லில் உருவான ஆஞ்சநேயர் மூர்த்தம் கோவிலின் பின்புறம் தரிசிக்கலாம். மூன்று முகங்களுடன் அழகாக இருக்கிறார். வியாஸராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.