அருள்மிகு வேங்கட வரதராஜப் பெருமாள் திருக்கோயில் (பெரும்பாக்கம்)
God Name : வேங்கட வரதராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
விழுப்புரம்
Call : +91-
மூலவர்: வேங்கட வரதராஜர் மற்றும் தாயார்: பெருந்தேவி.
மூலஸ்தானத்தில் வேங்கட வரதராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இவரது திருமார்பில் லட்சுமிநரசிம்மரின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் பேரெழில் கொண்டு விளங்குகின்றன. தனிக் கோயில் தாயாராக பெருந்தேவி தாயார் எழுந்தருளி உள்ளார்.
திருமலை வேங்கடவன், காஞ்சி வரதராஜர், அஹோபில நரசிம்மர் ஆகிய மூன்று பெருமான்களை சேவித்த திருப்தி கிட்டுகிறது.
பட்டாபிஷேக ராமர், லட்சுமி நாராயணர், ஆதி வெண் சடகோபன், நம்மாழ்வார், ஸ்வாமி தேசிகன், ஆண்டாள் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.
இத்தலத்திலுள்ள கல்யாண ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதியாக சேவை சாதிக்கின்றார். உரிக்காத மட்டைத் தேங்காயில் மஞ்சள்-குங்குமம் பூசி, கல்யாண ஆஞ்சநேயரின் திருவடிகளில் வைத்து, அர்ச்சனை செய்தால் திருமணத்தடை விலகுகிறது. கோரிக்கை நிறைவுற்றதும், தேங்காயை திரும்ப வாங்கிக் கொண்டு போகலாம் என்கின்றனர்.
அஹோபில மடத்து ஜீயர் ஸ்வாமிகள் இத்தலத்தில் தங்கியிருந்து இந்த பெருமாளையும், அஹோபில மடத்து பெருமாளான மாலோல லட்சுமிநரசிம்மரையும் ஆராதித்ததாக கூறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.